பென் டார்ச் பேட்டரியில் மொபைல்

மொபைல் பயன்படுத்தும் நம்மிடையே இருக்கும் ஒரு பெரிய பிரச்னை, பேட்டரி சார்ஜ் தீர்ந்து போய், பயன்படுத்த முடியாமல் இருப்பதுதான்.

இந்தக் குறையை நீக்கும் வகையில், இந்தியாவில் முதன் முதலாக பென் டார்ச் பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆலிவ் ஸிப் புக்ஸ் என்ற பெயரில் 3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வெளியிட்ட ஆலிவ் டெலி கம்யூனிகேஷன்ஸ் இந்தியா நிறுவனம் இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

Olive FrvrOn(ஆலிவ் பார் எவர் ஆன் வி–ஜி2300) என்ற பெயரில் வந்துள்ள இந்த போன் விலை ரூ. 1,699 எனக் குறியிடப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியுடன், பென் (சில்) டார்ச் செல்லிலிருந்தும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கலாம். தகவல் தொடர்பு பிரிவில் மக்களுக்கு உபயோகப்படும் வகையில் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு எளிய தீர்வுகளைக் காண்பதே எங்கள் இலக்கு என்ற இலட்சியத்துடன் இயங்குவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கேற்பவே இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த போன் AAA பேட்டரிகளில் இயங்குகிறது.

இந்த போனுடன் தரப்படும் லித்தியம் அயன் பேட்டரி பவர் இல்லை என்று உணரப்படுகையில், கையில் கிடைக்கும் AAA பேட்டரியைச் செருகிவிட்டு ஒருவர் போனைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

இந்த போனின் மற்ற வசதிகள்: 1.5 அங்குல வண்ணத்திரை, பாலிபோனிக் ரிங்டோன், எந்தAAA பேட்டரியையும் பயன்படுத்தும் வசதி,ஸ்டீரியோ ஹேண்ட்செட், எப்.எம். ரேடியோ, ஸ்பீக்கர் போன் ஆகியவை ஆகும்.

இது மிகச்சிறிய போனாக அதிகம் எடையற்ற மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சற்று உயர்ந்த நிலையில் உள்ள ரப்பர் கீகள் டெக்ஸ்ட் அமைப்பதில் உதவுகின்றன. 1.5 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. திரை பளிச்சென, பார்க்க எரிச்சல் தராமல் காட்சி அளிக்கிறது. சார்ஜ் செய்வதற்கும், ஹேண்ட்ஸ் பிரீ செட் இணைப் பதற்கும் போர்ட் கீழ் அடிப்பாகத்தில் தரப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஒரே மீடியா விஷயம் எப்.எம். ரேடியோ மட்டுமே. ஆனால் பென்டார்ச் பேட்டரியில் பவர் எடுத்து மொபைல் இயங்குகையில் ரேடியோ செயல்படுவது தடுக்கப்படுகிறது. ஆனால் ரேடியோ மிகச் சிறப்பாக அனைத்து அலைவரிசைகளையும் துல்லியமாக பிக் அப் செய்கிறது.அடிப்படையான அலாரம் கிளாக், கால்குலேட்டர், டைம் ஸோன் மற்றும் ஸ்டாப் வாட்ச் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இந்த போனின் பேட்டரிதான் அதிசயத்தக்க ஒன்றாகும். வெறும் 600mAh திறன் உள்ள பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. அதிகபட்சம் இதனைப் பயன்படுத்தி 2 மணி நேரம் மட்டுமே பேச முடியும். இது சரியில்லை.

எனவே தான் இதற்குத் தொடர்ந்து சக்தி அளிக்க பென்சில் பேட்டரி இணைப்பு தரப்பட்டுள்ளது. எந்த ஒரு மூலைக் கடையிலும் இதனை வாங்கி இணைத்துக் கொள்ளலாம். இதன் குறியீட்டு விலை ரூ.1,699 மட்டுமே

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails