மியூசிக் மொபைல்ஸ்

மொபைல் போன் பயன்படுத்தும் பலர், புதிய மாடல் போனுக்கு மாறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மியூசிக் ரசிப்பதற்காகும்.

பட்ஜெட்டை முடிவு செய்த பின் பலரும் ஒரு போனில் எதிர்பார்ப்பது மியூசிக் பிளேயர் ஆகும். பாடலைக் கேட்க மொபைலில் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆவலைத் தீர்க்க ரூ.5,000க்குள் விலையிடப்பட்டு, மக்கள் நாடும் சில போன்களைத் தேடிக் கண்டறிய முடிந்தது. இங்கு பட்டியலிடப்படாத போன்களிலும் சிறப்பாக இயங்கும் மியூசிக் மொபைல் போன்கள் நிச்சயம் இருக்கலாம்.

1. மைக்ரோமாக்ஸ் எக்ஸ் 360:

இசைக்கென எம்.டி.வி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த போன் கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டு தரப்படுகிறது. இதனுடன் தரப்படும் 2 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டில் பிரபலமான பாடல்கள். எம்.டி.வி. வீடியோ கிளிப்கள், பிரபலமான வீடியோ ஜாக்கிகளின் படங்கள் அமைந்த வால் பேப்பர்கள் பதிந்து தரப்படுகின்றன.

இதில் இணைந்து தரப்படும் Wolfson and Yamaha சவுண்ட் இஞ்சின், இசையை ரசிப்பதில் பெரிதும் துணைபுரிகிறது. இசையை இஷ்டப்படி செட் செய்திட 8 பேண்ட் கிராபிக் ஈக்குவலைசர் உள்ளது. இதன் விலை ரூ.3,558.

2. இன்டெக்ஸ் இன் 4495:

நம் இஷ்டப்படி இசையை ரசிக்க கிராபிக் ஈக்குவலைசர்கள், 3.5 மிமீ ஹேண்ட்ஸ் பிரீ போர்ட், டச் ஸ்கிரீன் திரை இவற்றுடன் ட்ராக் அண்ட் ட்ராப் விட்ஜெட், டெஸ்க்டாப்பி னைக் கையாளுவதற்காகத் தரப்பட்டுள்ளது.

இதன் யூசர் இன்டர்பேஸ் மிக எளிதாக யாரும் கையாளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அனைத்து அலை வரிசைகளையும் துல்லியமாகப் பெற்றுத் தரும் எப்.எம். ரேடியோ பாராட்டுக்குரியது. இதன் மார்க்கட் விலை ரூ.3,800

3. சாம்சங் மரைன் பி2100:

என்ன செய்தாலும் உடையாத, நொறுங்கிப் போகாத ஒரு மொபைல். மோட்டார் சைக்கிளைக் கொண்டு பலமுறை ஏற்றிப் பார்த்ததாக சாம்சங் அறிவித்துள்ள போன் சாம்சங் மரைன் பி2100. தண்ணீர் உட்புக முடியாத மொபைல். இதில் ஒரு எல்.இ.டி. டார்ச் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

இதன் மியூசிக் பிளேயர் உரக்க ஒலி எழுப்பினாலும், மிகத் தெளிவாகக் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. இதன் மூலம் இமெயில்களை டவுண்லோட் செய்திடலாம். இதன் விலை மார்க்கட்டில் ரூ.4000.

4. எல்.ஜி. ஜி.எம்.200:

இந்த மொபைல் போனில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, டால்பி மொபைல் சவுண்ட் இஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு எந்த மொபைல் போன் தரும் இசையைக் காட்டிலும் இது மிக மிக இனிமையான இசையைத் தருகிறது.

ஹேண்ட்ஸ் பிரீ போர்ட் இருப்பதால், நமக்கு விருப்பமான ஹெட் போன் இணைத்து இசையை ரசிக்கலாம். இதற்கேற்ற வகையில் இதன் எப்.எம். ரேடியோவும் செயல்படுகிறது. இதன் விலை ரூ.4,327.

மேலே குறிப்பிட்ட போன்களுடன் வேறு நிறுவனங்களின் போன்களும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. ரூ.5,000 என்ற பட்ஜெட் விலைக் கண்ணோட்டத்துடன் பார்க்கையில் இவை நம் கண்களில் பட்டன.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails