மைக்ரோசாப்ட் வழங்கும் பிங் (Bing) சர்ச் இஞ்சினில் தேடலை மேற்கொள்கையில், நம் தேடலுக்கான முடிவுகள் தரப்படுகையில் முதல் பக்கத்தில் 10 முடிவுகள் காட்டப்படும்.
பின் அடுத்த பக்கங்களில் மற்றவை கிடைக்கும். ஏன் 10 மட்டுமே தரப்படுகிறது என்று கவலையா? இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் வசதி உள்ளது. இந்த தேடல் தளத்தின் ஹோம் பேஜில் வலது பக்கம் மேலாகப் பாருங்கள்.
அங்கு Preferences என்று ஒரு பகுதி இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். உடனே பல செட்டிங்குகளை அமைக்கக் கூடிய ஒரு பக்கத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் வசதிக்கேற்ப பிங் தேடல் தளத்தின் பல வசதிகளை ட்யூன் செய்திடலாம்.
இப்போது உங்கள் விருப்பத்திற்கான செட்டிங்ஸ் அமைக்கலாம். அங்கு Web Settingsஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.இங்கு கிடைக்கும் பாக்ஸில் எத்தனை தேடல் பதில்கள் காட்டப்பட வேண்டுமோ அந்த எண்ணைத் தரவும்.
அதன் பின்னர் குச்திஞு குஞுttடிணஞ்ண் என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த எண்ணிக்கையில் தேடல் முடிவுகள் காட்டப்படும்.
0 comments:
Post a Comment