புதிரான பைல் எக்ஸ்டன்ஷன் பெயர்

நாம் எண்ணிப் பார்க்க இயலாத எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் பைல்களுக்கான எக்ஸ்டென்ஷன் பெயர்கள் இருக்கும். பொதுவாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பைல் வடிவங்கள் குறித்து நாம் அறிவோம்.

அவ்வளவாகப் பயன்படுத்தப்படாத, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த, சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற பைல்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள வழி உள்ளதா? என்று ஒரு விளக்கத்துடன் கோசாகுளம் புதூர் என்ற ஊரிலிருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். இவருக்கான பதிலைத் தரத் தேடியபோது அழகான, பயனுள்ள ஓர் தளம் நம் கண்ணில்பட்டது. அந்த தளம் குறித்துக் காணலாம்.

கம்ப்யூட்டர்களின் பயன்பாடும், அதில் பயன்படுத்தப்படும் பைல்களின் வகையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும், பைல்களின் பெயர் வகைகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய வழிகள் எப்போதும் எளிதே. .jpeg, .gif, .html and .doc. போன்ற பெயர்களை நாம் நன்கு அறிவோம்.

ஆனால்.bat, .otf, .xml or .sqm போன்ற பெயர்கள் உள்ள பைல்களைப் பெறும்போதோ, அல்லது அவை குறித்துப் படிக்கும் போதோ சற்று தடுமாறுவோம். இவை குறித்து அறிந்து கொள்ளhttp://www.fileextensions.org/ என்ற முகவரி யில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.

தேடல் இஞ்சின் மூலம், நீங்கள் அறியாத பைல் எக்ஸ்ஸ்டென்ஷன் பெயரைத் தேடினால், இந்த தளத்தைத்தான் முதன்மைத் தளமாகக் காட்டும். அல்லது இந்த தளத்தில் தரப்பட்டுள்ள அகரவரிசை யில், நீங்கள் தேடும் பைல் எக்ஸ்டன்ஷன் என்ன எழுத்தில் தொடங்குகிறதோ, அதனைக் கொடுத்து அறியலாம்.

இங்கு பைல் எக்ஸ்டன்ஷன் குறித்து தகவல் கொடுப்பதுடன், அந்த பைலை எந்த புரோகிராம் இயக்கும், அது எங்கே கிடைக்கும் என்ற விபரமும் தரப்படுகிறது. சில வேளைகளில் அந்த புரோகிராம் பெறுவதற்கான லிங்க் இங்கு தரப்படுகிறது.

எடுத்துக் காட்டாக .rar என்ற துணைப்பெயர் கொண்ட பைல் ஒன்று நான் கேம்ஸ் விளையாடப் பயன்படுத்த வேண்டிய தாயிருந்தது. இந்த தளம் சென்ற போது, இந்த துணைப் பெயர் கொண்ட பைலை WinRAR என்ற புரோகிராம் இயக்கும் என்ற தகவல் முதலில் கிடைத்தது. அத்துடன் இந்த பெயர் கொண்ட பைல்கள்,.zip பைல்களைப் போலச் சுருக்கப்பட்ட பைல்கள் என்ற தகவலும் கிடைத்தது.

இந்த தளத்தின் பக்கங்களில் இரு மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் அடிக்கடி தெளிவு பெறும் பைல்களின் துணைப் பெயர்கள் மற்றும் பொதுவான பைல்களின் துணைப் பெயர்கள் (Most Visited File Extensions and Common File Extensions) என இருவகைகள் தரப்பட்டுள்ளன.

.rar குறித்துப் பார்க்கும் போது அடிக்கடி தெளிவு பெறத் தகவல் தேடப்படும் பைல் பெயர்கள் பட்டியலில் இது எட்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. (நமக்கு மட்டுமல்ல, பலருக்கும் .rar பைல் பெயர் குறித்து சந்தேகம் வந்துள்ளது என்று திருப்திபட்டுக் கொண்டேன்.)

பொதுவான பைல்களின் துணைப் பெயர்கள் பிரிவில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றையும் பார்த்து நாம் பயன்படுத்தும் பைல்களின் தன்மை குறித்து கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இனிமேல் எந்த பைல் துணைப் பெயரும் உங்களைப் பயமுறுத்தாது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails