Saturday, June 5, 2010

இரண்டு வகை சிம் பயன்பாடு

பொதுவாக மொபைல் போன்களில் ஜி.எஸ்.எம். அல்லது சி.டி.எம்.ஏ வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்கள் எனத் தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைத்து வருகின்றன. 

இரண்டு சிம்களில் இயக்கப் படக் கூடிய மொபைல் போன்கள் வடிவமைக்கப்பட்ட போது, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை சிம்கள் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் கிடைத்தன. ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்த முடியாது. 

இந்தியாவில் முதன் முதலாக இரண்டு சிம் பயன்பாட்டில், எந்த தொழில் நுட்ப (ஜி.எஸ்.எம்./ சி.டி.எம்.ஏ.) சிம்மையும் எதன் இடத்திலும் பயன்படுத்தும் வகையில் போன் உருவாக்கப்பட்டு, மலிவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 

பிரைட் டெலிகாம் நிறுவனம் இவ்வகையில் ஒரு போனை வடிவமைத்து ஜிபோன் (‘GFone’G588) என்ற பெயரில் தந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். அல்லது ஒரு ஜி.எஸ்.எம் + ஒரு சி.டி.எம்.ஏ. சிம்களைப் பயன்படுத்தலாம். 

இது ஒரு முழு குவெர்ட்டி கீ போர்டு கொண்டது. 2.2 அங்குல வண்ணத்திரை கொண்டது. புளுடூத், எப்.எம். ரேடியோ, வாப்/ஜி.பி.ஆர்.எஸ்., எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளேபேக், 8ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, 1.3 எம்பி கேமரா ஆகியன கொண்டதாக உள்ளது. 

இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இதில் இந்திய காலண்டர் தரப்பட்டு, இந்திய பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதன் குறியீட்டு விலை ரூ.4,799.

1 comment:

  1. ok gprs available is good but which service provider willing to give gprs connection. Because all the network ready to give the gprs settings only company mobile(like Nokia, Soni erikson, motorola, lg, samsung, micromax...). Any one clarify this thank u.

    ReplyDelete

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...