இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதிர்காலம்

இன்றும் இணைய பிரவுசர்களில், பெரும் பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தான் முதல் இடம் கொண்டுள்ளது. 

ஆனால் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருவது ஆய்விலிருந்து கண்டறியப் பட்டுள்ளது. ஐ.இ. தொகுப்பு 6 லிருந்து ஐ.இ. தொகுப்பு 8 வரை பயன்படுத்துபவர்களிடம் நடத்திய ஆய்வில், பாரஸ்டர் ரிசர்ச் நிறுவனம் (Forrester Research)  இந்த முடிவிற்கு வந்துள்ளது. 

ஏறத்தாழ ஐந்து சதவிகிதம் பேர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு பயன்படுத்துவதனை விட்டுவிட்டு மற்றவற்றிற்கு மாறியுள்ளனர். இதுவரை 77.2% பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது இது 72.5% ஆகக் குறைந்துள்ளது. இது 2009 ஏப்ரல் மாதத்திலிருந்து, 2010 மார்ச் மாதம் வரையிலான இழப்பாகும். 

இந்த காலத்தில் பயர்பாக்ஸ் 17% லிருந்து தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைய் 20% ஆக உயர்த்தி உள்ளது. குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.3% லிருந்து 6.9% ஆக, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் அடுத்த போட்டி யாளரைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்பது உறுதியான தகவல் என்றாலும், சரிந்து வரும் எண்ணிக்கை நம்பிக்கையை நிச்சயம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அளிக்காது. 

ஏன் இந்த மாற்றம்? என்று பார்க்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தரப்படும் மிகப் பெரிய எண்ணிக்கை யிலான ஆட் ஆன் தொகுப்புகள், குரோம் பிரவுசரின் வேகத்தேடுதல் மற்றும் தொழில் நுட்பத்தினைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து, வசதிகளைத் தரும் தொழில்நுட்ப வல்லுநர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்போடு எப்போதும் பேசப்படும் பாதுகாப்பற்ற, ஸ்திரமற்ற தன்மை எனப் பல காரணங்களைக் கூறலாம். 

பொதுவாக, பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மக்கள் எண்ணிக்கை சுருங்கி வருவது மறுக்க முடியாத உண்மையாகும். 

பொதுவாக ஒன்றைப் பயன்படுத்து பவர்கள், அது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தராவிட்டாலும், பாதகமான விஷயங்களைத் தந்தால் மாறத்தான் செய்வார்கள். அதுதான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விஷயத்திலும் நடக்கிறது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விஷயத்தில் பலரும், இந்த பிரவுசர் நமக்குத் தானாகத் தரப்பட்டுள்ளது என்று தான் பயன்படுத்துகிறார்கள். இது பிடிக்காமல், விலகிச் சென்று,மற்ற பிரவுசர்களை டவுண்லோட் செய்து பயன்படுத்துபவர்கள், நிச்சயம் மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு வருவதற்குத் தயங்குவார்கள். 

இதனால்தான் வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் தன் முழு கவனத்தையும் மைக்ரோசாப்ட் செலுத்தி வருகிறது. எப்படி இதனைத் தரப் போகிறது என்று பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails