பல வேளைகளில் நாம் நம் கீ போர்டு, எந்த கீயைத் தொட்டாலும் செயல்படக் கூடாது என விரும்புவோம். எடுத்துக் காட்டாக, சிறிய திரைப்படம் ஒன்றை வெகு சுவராஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போது நம்மைச் சுற்றி விளையாடும் குழந்தைகள், நம் அருகே வந்து, திரைப்படத்தையும் ரசனையோடு பார்பார்கள். அத்துடன் ஆர்வக் கோளாறில் ஏதேனும் ஒரு கீயை அழுத்துவார்கள். இதனால் படம் இயங்குவது நின்று போகலாம்.
அலுவலகத்தில் முக்கியமான பைல் ஒன்றை இயக்குகையில் சிறிது தூரம் நடந்து சென்று போன் ஒன்றில் பேச வேண்டிய திருக்கும். அல்லது அடுத்த அறையில் முக்கியமான பைல் ஒன்றை எடுத்து வர வேண்டியதிருக்கும்.
அந்நேரத்தில்,அலுவலக சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் தெரிந்த ஒருவர், உங்கள் கீ போர்டின் மூலம், கம்ப்யூட்டரில் உள்ள பைலைத் திறக்கலாம்; அல்லது எடிட் செய்திடலாம். இதனைத் தடுக்க உங்கள் கம்ப்யூட்டரின் கீ போர்டை லாக் செய்திடலாம்.
நாம் பெரிய பைல் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். அதற்கு 30 நிமிடங்கள் ஆகலாம். இதற்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, மானிட்டரைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. நகர்ந்தால், கீ போர்டை யாராவது கையாண்டு, டவுண்லோட் செய்வதனை, அவர்கள் அறியாமலேயே கெடுத்துவிடலாம். இங்கும் கீ போர்டினை லாக் செய்திடும் அவசியம் நமக்கு நேர்கிறது.
இந்த தேவைகளுக்கான தீர்வை கிட் கீ லாக் (Kidkey Lock) என்னும் புரோகிராம் தருகிறது. இது இணையத்தில் இலவசமாக 746 கேபி என்ற அளவில் கிடைக்கிறது.இதனைப் பெற http://kidkeylock.en.softonic.com என்ற முகவரிக்குச் செல்லவும்.
டவுண்லோட் செய்து பதிந்த பின்னர், இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. இதனை இயக்கி, நாம் எதனை எல்லாம் லாக் செய்திட வேண்டும் என விரும்புகிறோமோ அதற்கேற்ற வகையில் பாக்ஸ்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். கீ போர்டு மட்டுமின்றி மவுஸ் இயக்கமும் பூட்டப்படுகிறது.
இந்த புரோகிராமினை இயக்க இரண்டு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டும். ஒன்று இதனை செட் செய்திட; மற்றொன்று இதனை இயக்கிட. இயக்கத்தை நிறுத்தும் பாஸ்வேர்டினை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாமும் கீ போர்டினை இயக்க முடியாது. அந்நேரத்தில் மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குவதே தீர்வாக முடியும்.
0 comments:
Post a Comment