ஏர்போன் ஏ.க்யூ9 மொபைல்

டைப்ரைட்டிங் கீ போர்டு (குவெர்ட்டி) கொண்ட மொபைல் போன்கள் மட்டுமே இனி மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்ற வகையில் பல நிறுவனங்கள், குறைந்த விலையில் குவெர்ட்டி கீ போர்டு கொண்ட மொபைல் மாடல்களை, பட்ஜெட் விலையில் கொண்டு வருகின்றன. 

அவ்வகையில் அண்மையில் வெளியான ஒரு போன் ஏர்போன் ஏ.க்யூ9 ஆகும். இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.அடிப்படையில் போன் பேசுதல் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பவும், பெறவும் இயக்குதல் ஆகிய இரண்டு பணிகளுக்கான போனாகவே இது உள்ளது. 

128 து 128 என்ற பிக்ஸெல் திறனுடன் கூடிய வண்ணத்திரை, சிறிது உயர்த்தப்பட்ட நிலையிலான குவெர்ட்டி கீ போர்டுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மிக வேகமாக டெக்ஸ்ட் அமைக்க முடிகிறது. போனின் எடை மிகவும் குறைவு. 

உள்ளாக அமைந்த ஆன்டென்னா இருந்தாலும், அதனை வெளியே இழுக்காமலேயே, இதன் எப்.எம்.ரேடியோ செயல்படுகிறது. 2 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்தலாம். நல்ல ஸ்பீக்கர்களுடன் ஸ்பீக்கர் போன் பயன்படுகிறது. 

மியூசிக் பிளேயரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது. தலைப்பாகத்தில் எல்.இ.டி. கொண்ட டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வழக்கம்போல கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக்,காலண்டர் போன்ற வசதிகளும் உள்ளன. 

போனுக்கான பாஸ்வேர்ட் லாக் வசதியும் உள்ளது. இதில் தரப்பட்டுள்ள 1200ட்அடபேட்டரி, இரண்டு நாட்களுக்கு தாக்குப் பிடிக்கிறது. மூன்று மணி நேரம் உறுதியாகத் தொடர்ந்து பேச முடிகிறது.

இந்த போனில் உள்ள பெரிய குறை யு.எஸ்.பி. போர்ட் இல்லாததுதான். இதனால் டேட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், போனை ஆப் செய்து, மெமரி கார்டை நீக்கி, அதனை ஒரு கார்ட் ரீடரில் செருகி, கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

இதன் விலை ரூ. 2,000 மட்டுமே எனக் குறிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails