இந்தியாவிலேயே முதல் முதலாக, பெரிய ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்ப்ளிபயர் கொண்ட மொபைல் போனை ""பூம்'' என்ற பெயரில் (Fly Boom MC 105) ஃபிளை மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ஸ்பீக்கர் 30 x 40 மிமீ அளவில் உள்ளது.
இதில் இணைந்துள்ள ஆம்பிளிபயர், பார்ட்டிகளில் தேவைப்படும் இசை ஒலியை வழங்குகிறது. இவற்றுடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக், திட்டமிட்டு ரெகார்ட் செய்திடும் வசதியும், 15 சேனல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் கொண்ட எப்.எம். ரேடியோ, ஐந்து வகையான எப்.எம். அலாரம், வால்யூம் கண்ட்ரோல் செய்திட தனி கீகள், பல வகை வசதி கொண்ட ஆடியோ பிளேயர், 1200 mAH பேட்டரி, பாலிவுட் வீடியோ பதியப்பட்ட 2 ஜிபி மெமரி கார்ட், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட், புளுடூத் மற்றும் இன்டர்நெட் பிரவுசிங் வசதி, ஆபத்துக் காலத்தில் ஒரு கீ அழுத்தி எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி, ஆபத்து எஸ்.எம்.எஸ். பெறுபவர் அழைத்தால், தானாக அழைப்பினை ஏற்றுக் கொள்ளும் வசதி என புதிய முதல் வகை வசதிகள் பலவற்றை இந்த போன் கொண்டுள்ளது.
மேலும் மொபைல் ட்ரேக்கர், பாஸ்வேர்ட் பாதுகாப்பு, தேவையற்ற அழைப்புகளை பிளாக் லிஸ்ட் செய்வது, எஸ்.எம்.எஸ். களை வடிகட்டுவது, அழைப்புகளை கட் செய்கையில், ஏற்கனவே அமைத்த செய்திகளை எஸ்.எம்.எஸ். ஆக அனுப்புவது, பிறந்த நாள், திருமண நாள் போன்ற வற்றைக் குறித்து வைத்தால் தானாக வாழ்த்துச் செய்தியை எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பும் வசதி, இரண்டு ஜி.எஸ்.எம். சிம் பயன்பாடு, 1000 முகவரிகள் கொள்ளும் அட்ரஸ் புக், எல்.இ.டி. டார்ச், ஜி.பி.ஆர்.எஸ்., விஜிஏ கேமரா, 3ஜிபி/ஏ.வி.ஐ. ஆடியோ பிளேயர், வீடியோ ரெகார்டிங், இந்திய திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை அறிய இந்திய காலண்டர் என எக்கச் சக்க வசதிகளைக் கொண்டுள்ள இந்த மொபைல் போன், நிச்சயம் இதன் வசதிகளின் எண்ணிக்கைக்க õக,இந்தியாவில் இடம் பெறும்.
பிளை மொபைல் நிறுவனம், பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு பல நாடுகளில் இயங்கும் ஒரு நிறுவனம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment