ஈஸி டூப்ளிகேட் பைண்டர்

பைல்களை நாம் அடிக்கடி நகலெடுத்துப் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றை அழிக்க மறந்துவிடுவோம். 

இமெயில் அனுப்புகையில், அவசரமாகத் திறந்து பயன்படுத்த, டெஸ்க் டாப்பில் வைத்து இயக்குவதற்காக எனப் பல காரணங்களால், ஒரே பைல் தன் நகல்களுடன் ஹார்ட் டிஸ்க் இடத்தினை அடைத்துக் கொண்டு இருக்கும். 

குறிப்பாக எங்கு சென்றாலும், ஆடியோ பாடல் பைல்கள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் அவற்றின் நகல்களை ஹார்ட் டிஸ்க்கின் பல இடங்களில், டைரக்டரிகளில் வைத்திருப்போம். 

ஹார்ட் டிஸ்க் இட நெருக்கடியை உணர்கையில் மட்டுமே, அடடா! இந்த டூப்ளிகேட் பைல்களை தவிர்த்திருக்கலாமே என்று ஆதங்கப்படுவோம். ஆனால், இப்போது பைல் ஒன்றின் டூப்ளிகேட் நகல்களை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது? 

இந்த வேலையை நமக்காக மேற்கொண்டு செய்வதற்குப் பல புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் சிறந்த ஒரு புரோகிராம் Easy Duplicate Finder ஆகும்.

இது போன்ற மற்ற புரோகிராம் களிடமிருந்து, இதனை வித்தியாசப் படுத்திக் காட்டும் அம்சம் இதன் வேகமாகும். மிகவும் துல்லியமாக பைல் ஒன்றின் நகலைக் வேகமாகக் கண்டறிகிறது. கண்டறிவதுடன் மட்டுமின்றி, அவற்றைப் படித்து அறியும் வகையில் பட்டியலிட்டு தருகிறது. 

டூப்ளிகேட் பைல்களை பைட், பைட்டாக ஒப்பிட்டுக் கண்டறிகிறது. இதன் ஸ்கேன் செய்திடும் வகையும் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் டூப்ளிகேட் பைல்களைத் தேடுமாறும் இதனை அமைக்கலாம். 

சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் சேதப்படுத்துவது இல்லை. டூப்ளிகேட் பைல்களை நம் அனுமதியுடன் ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. இதற்கு யூனிகோட் சப்போர்ட் தரப்பட்டுள்ளதால், மற்ற மொழிகளில் பைல் இருந்தாலும் கண்டறிகிறது.

இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.easyduplicatefinder.com/files/easy_duplicate_setup.exe

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails