எக்ஸெல் தொகுப்புக்குப் பதிலாக

உங்களிடம் எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு இல்லையா? கட்டணம் செலுத்தி அதனை வாங்கிப் பயன்படுத்தாமல் வேறு வழிகளில் என்ன செய்யலாம் என்று எண்ணுகிறீர்களா? 

இதோ இங்கு எக்ஸெல் தொகுப்பிற்கான இலவச புரோகிராம்கள் குறித்து தகவல்களைத் தருகிறேன்.


1. கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்ஸ் (Google Spreadsheets): 

கூகுள் டாக்ஸ் என்ற குடும்பத்தின் ஒரு உறுப்பினர். இணைய இணைப்பில் இதனைப் பெற்று, புதிய ஸ்ப்ரெட் ஷீட்டைத் தயார் செய்திடலாம். ஏற்கனவே தயார் செய்த எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை, அப்லோட் செய்து, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 

அங்கேயே வைத்து எடிட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரிலும் பதிந்து கொள்ளலாம். இதற்கு உங்களுக்குத் தேவையானதெல்லாம், ஒரு நல்ல இன்டர்நெட் இணைப்பும் பிரவுசருமே. இதனைப் பெறhttp://docs.google.com/ /என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 


2. ஸோஹோ ஷீட்ஸ் (SohoSheets):  

இதுவும் கூகுள் தருவது போலத்தான். இணைய இணைப்பில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒர்க் ஷீட்களை உருவாக்கி, மற்றவர்களுடன் பகிர்ந்து, திருத்தி என எத்தகைய முறையில் வேண்டுமானாலும் செயல்படலாம். ஒரே நேரத்தில் ஓர் ஒர்க்ஷீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர் செயல்பட ஸோஹோ ஒர்க்ஷீட் அனுமதிக்கிறது. இதனைப் பெற http://sheet.zoho.com/ என்ற முகவரிக்குச் செல்லவும். 

3.எடிட் கிரிட் (EditGrid): 

ஒரு ஆன்லைன் ஸ்ப்ரெட் ஷீட் சர்வீஸ் என இதனை அழைக்கலாம். இதில் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் அனைத்து அம்சங்களும் உள்ளன. அனைவருடன் பகிர்ந்து கொண்டு, பதிப்பிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. சிலவற்றில் இது எக்ஸெல் தொகுப்பின் தன்மை யையும் மிஞ்சுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.editgrid.com/


4. நம்சம் (Num Sum):

 ஆன்லைனில் எளிய, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஸ்ப்ரெட்ஷீட்களை இது தருகிறது. இதன் மூலம் சோஷியல் ஸ்ப்ரெட் ஷீட்களை நீங்கள் உருவாக்கலாம். இந்த வசதியைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தளம் உள்ள முகவரி http://numsum.com/

5.சிம்பிள் ஸ்ப்ரெட்ஷீட் (Simple Spreadsheet): 

ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ். மற்றும் பி.எச்.பி. யில் எழுதப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இதில் பார்முலாக்கள், வரைபடங்கள், நியூமெரிக் பார்மட்கள், கீ போர்டு நேவிகேஷன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் டேட்டா படிவம் ஜாவா ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த இலவச சாப்ட்வேர் தொகுப்பினைப் பெற http://www.simplegroupware.de/cms/Spreadsheet/Home என்ற முகவரிக்குச் செல்லவும். 

6. விக்கி கால்க் (WikiCalc): 

ஒர்க் ஷீட் ஒன்றின் கால்குலேஷன்கள் அனைத்தையும் இதில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் இணைய தளங்களையும் உருவாக்கலாம். அனைவரும் எடிட் செய்திடும் வகையில் ஸ்ப்ரெட் ஷீட்களையும் உருவாக்கலாம். இதனை http://www.softwaregarden.com/products/wikicalc//என்ற முகவரியில் பெறலாம். 

7. இஸட் க்யூப்ஸ் கால்சி (Zcubes Calci): 

CALCI என்பது இணையத்தில் கிடைக்கும் ஒரு கால்குலேஷன் இஞ்சின். ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைக் காட்டிலும் அதிகம் பயனுள்ள விஷயங்களைத் தன்னிடத்தில் வைத்துள்ள புரோகிராம் இது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிவிபர கணக்கீடுகள், அறிவியல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட, ரெடிமேட் டெம்ப்ளேட்டுகளைக் கொண்டுள்ளது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: 

மேலே தரப்பட்டவை எல்லாம் இணையத்தில், இணைய அடிப்படையில் இயங்குபவை. இவற்றை டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திட வேண்டிய தேவை இல்லை. அப்படியே இணைய இணைப்பில் இயக்கலாம். பைல்களை மட்டும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கலாம். 

டெஸ்க் டாப் அடிப்படையில் சில ஸ்ப்ரெட் ஷீட்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். 

1.ஓப்பன் ஆபீஸ் கால்க் (Open Office Calc): 

டெஸ்க் டாப் அடிப்படையில் இயங்கும் ஸ்ப்ரெட் ஷீட் அப்ளிகேஷன் புரோகிராம். ஓப்பன் ஆபீஸ் தொகுப்பின் ஒரு பகுதி. மைக்ரோசாப்ட் எக்ஸெல் தொகுப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மிக நவீனமான டேட்டா பைலட் (Data Pilot)  என்னும் அப்ளிகேஷனையும் இது இயக்குகிறது. 

இதன் மூலம் நிறுவனங்களின் டேட்டா பேஸ் அமைப்பிலிருந்து டேட்டாக்களைப் பெற முடியும். அந்த டேட்டாக்களைப் பெற்று, இதன் மூலம் கையாண்டு, அர்த்தமுள்ள தகவல்களைப் உருவாக்க முடியும். இதனைப் பெற http://www.openoffice.org /product/calc.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி ஸ்ப்ரெட் ஷீட்ஸ் (IBM Lotus Symphony Spreadsheets):  

பலவகையான ஸ்ப்ரெட் ஷீட்களை இதன் மூலம் உருவாக்கலாம். புதிய ஒர்க்ஷீட் அமைக்கலாம்; பழையதைத் திருத்தலாம். பலவகையான டெம்ப்ளேட்டுகள் இதில் தரப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு http://symphony.lotus.com/software/lotus/symphony/home.nsf /product_sse என்ற முகவரிக்குச் செல்லவும். 

3. அபிகஸ் (Abykus)

வர்த்தகம்,கல்வி மற்றும் ஆய்வு சம்பந்தமான ஸ்ப்ரெட் ஷீட்களை இதில் உருவாக்க முடியும். இதில் புள்ளிவிபரங்களை ஆய்வு செய்திட தனி கட்டமைப்பு உள்ளது. கணக்கு, மேட்ரிக்ஸ், நிதி, காலக் கணிப்பு, கோ ஆர்டினேட் ஜியாமெட்ரி, 3 டி கிராபிக் டிஸ்பிளே செயல்பாடுகள் கிடைக்கின்றன. ஒரே நேரத்தில் அனைத்து செல்களையும் அடக்கிய 32 ஒர்க்புக்குகளை இதில் இயக்கலாம். மேலும் தகவல்களுக்கு http://www.abykus.com  என்ற முகவரிக்குச் செல்லவும்.

4. ஜிநியூமெரிக் (Gnumeric)

ஜிநியூமெரிக் அல்லது ஜி நோம் ஆபீஸ் ஸ்ப்ரெட் ஷீட், ஜிநோம் டெஸ்க்டாப் அப்ளிகேஷனைச் சேர்ந்தது. எந்த அப்ளிகேஷனில் உருவான ஸ்ப்ரெட் ஷீட்டினையும் இதில் இணைத்துக் காணலாம். எடிட் செய்திடலாம். 

5. ஸ்ப்ரெட் 32 (Spread32):  

ஒரு சிறிய ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம். ஆனால் 256 columns x 65536 rows x 255 sheets களுடன் சக்கை போடு போடுகிறது. 300 செயல்பாடுகளுக்கு மேலானவற்றிற்கு பார்முலாக்கள் கிடைக்கின்றன. மேலும் தகவல்களுக்கு http://www.xtort.net/officeandproductivity/floppyoffice/ / என்ற முகவரிக்குச் செல்லவும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails