வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், நாம் பலமுறை அதனைத் திருத்தவும், திருத்தியவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவும் விரும்புவோம். ஆனால் எப்போதும் நாம் என்ன முன்பு திருத்தினோம் என்பதையும் வேர்ட் காட்டினால் நல்லது என விருப்பப்படுவோம்.
இதற்காக ஒவ்வொரு திருத்தத்திற்கும், பைலின் ஒரு பதிப்பை, வெவ்வேறு பெயர்களில் வைத்துக் கொள்ள முடியாது. இந்த வசதிகளை உள்ளடக்கிய டூல் ஒன்று வேர்டில் தரப்பட்டுள்ளது. அதன் பெயர் Reviewing toolbar. இந்த டூல் பார் தரும் வசதிகளையும், அதன் பயன்களையும் இங்கு பார்க்கலாம்.
இன்னும் வேர்ட் 97 மற்றும் வேர்ட் 2000 பயன்படுத்துபவர்களுக்கு:
1. இந்த டூல்பாரை இயக்கத்திற்குக் கொண்டு வர, வியூ(View) மெனுவிலிருந்து டூல்பார்ஸ்(Toolbars) தேர்வு செய்து, அதில் Reviewing என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதனை உறுதி செய்திடவும். பொதுவாக இது வேர்ட் டாகுமெண்ட்டில் ரூலருக்கு மேலாகக் காட்டப்படும். 2. ரிவியூவிங் டூல்பார் நான்கு வகைப் பணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை:
Comments:
இது முதல் ஐந்து டூல்களாகும். இவற்றின் மூலம் நாம் குறிப்புகளை அமைக்கலாம், திருத்தலாம் மற்றும் நீக்கலாம். குறிப்புகள் ஊடாக முன்னும் பின்னும் வேகமாகச் சென்று இவற்றைக் கையாளலாம்.
அடுத்துTrack Changes. இது அடுத்த ஐந்து டூல்களைக் கொண்டுள்ளது. டெக்ஸ்ட்டில் செய்த மாற்றங்களைக் கட்டமிட்டுக் காட்டும். ஒரு மாற்றத்திற்கு முன்னதாகவும், அடுத்தும் மேற்கொண்ட மாற்றத்தினையும் காட்டும். மாற்றங்களை ஒதுக்கித் தள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் வழிகளைத் தரும்.
மூன்றாவது டூல் Highlighting . பார்மட்டிங் டூல்பாரில் உள்ள அதே ஹைலைட்டிங் டூல் பார் தான் இது. இதுவும் ரிவியூவிங் டூல்பாரில் இணைக்கப்பட்டுள்ளது. அதே செயல்பாட்டினை இதன் மூலமும் மேற்கொள்ளலாம்.
அடுத்த டூல் பார் குரூப் Miscellaneous இது அவுட்லுக் தொகுப்பிற்கு டெக்ஸ்ட்டை அனுப்புகிறது. இதன் மூலம் ஒரு டாகுமெண்ட்டை சேவ் செய்து இமெயில் மூலம் அனுப்பலாம்.
வேர்ட் 2002 தொகுப்பிலிருந்து, மைக்ரோசாப்ட் வேர்ட் ரிவியூவிங் டூல் பாரில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால் நோக்கங்களும் வேலைப்பாடும் மாறாமல் இருந்தன. அவற்றைப் பார்க்கலாம்.
1. Display: முதலாவதாகத் தரப்பட்டுள்ள இரண்டு டூல்களின் தொகுதி. இவை இரண்டுமே கீழ் விரி பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. நீங்கள் டெக்ஸ்ட்டில் செய்த மாற்றங்களில் எந்த வகை மாற்றங்கள் காட்டப்படுகின்றன என்பதை, இந்த டூல் கட்டுப்படுத்துகிறது.
2. அடுத்தது Track Changes: மேலே சொன்ன வகையில், டெக்ஸ்ட்டில் ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டி, அவற்றை மேற்கொள்ளவும், நீக்கவும் உதவுகிறது.
3. Comments: இந்த வகையில் ஒரே ஒரு டூலினைக் கொண்டுள்ளது. டாகுமெண்ட்டில் ஏற்படுத்தும் குறிப்புகளைக் கட்டுப்படுத்திக் கையாளும் வசதியினைத் தருகிறது.
4.Track Changes Control: இதன் மூலம் மாற்றங்கள் அனைத்தையும் மொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
5. Reviewing Pane: ஒரு தனிப் பிரிவினை திரையின் கீழ் இந்த டூல் உருவாக்கிக் காட்டவும் மறைக்கவும் செய்திடும். இதில் நாம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கூடுதல் தகவல்கள் காட்டப்படும்.
வேர்ட் 2007ல் வழக்கமான இந்த ரிவியூவிங் டூல்பாரின் தோற்றத்தினை, மைக்ரோசாப்ட் மாற்றியுள்ளது. இவற்றை ரிவியூ டேப் ரிப்பன் மூலம் பெறும்படி அமைத்துள்ளது. பெரும்பாலான டூல்கள் Comments and Tracking என்ற இரண்டு பிரிவுகளில் கிடைக்கும்படி தந்துள்ளது.
0 comments:
Post a Comment