வீடியோகான் வழங்கும் மொபைல் இன்டர்நெட்

அண்மையில் மொபைல் மார்க்கட்டில் நுழைந்த வீடியோகான் மொபைல் சர்வீசஸ் நிறுவனம் பல புதியவகை கட்டணத் திட்டங்கள் மூலம் காலூன்றி வருகிறது. 

தற்போது வரையறையற்ற இன்டர்நெட் வசதியினைத் தன் மொபைல் பயனாளர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடியோகான் மொபைல் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைக் கட்டண திட்டம் வழங்கப்படுகிறது. எத்தனை கேபி டேட்டா இறக்கப்படுகிறது, 

எவ்வளவு நேரம் இன்டர்நெட்டில் இருந்தோம் என்ற கணக்கு எதுவுமின்றி, சுதந்திரமாக மாதம் ரூ.96 செலுத்தி, தொடர்ந்து மொபைல் போனில் பிரவுசிங் மேற்கொள்ள வழி தரப்பட்டுள்ளது. 

மொபைல் வழி இன்டர்நெட் பழக்கம் சென்ற ஆண்டில் 245% வளர்ந்துள்ள நிலையில், இன்டர்நெட் பயன்பாட்டினை மொபைல் போனில் மேற்கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிக எண்ணிக்கையில் வீடியோகான் மொபைல் சர்வீசஸ் திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என வீடியோகான் எதிர்பார்க்கிறது.




Source : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=674&ncat=5

கீ போர்டு / மவுஸ் லாக்

பல வேளைகளில் நாம் நம் கீ போர்டு, எந்த கீயைத் தொட்டாலும் செயல்படக் கூடாது என விரும்புவோம். எடுத்துக் காட்டாக, சிறிய திரைப்படம் ஒன்றை வெகு சுவராஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

அப்போது நம்மைச் சுற்றி விளையாடும் குழந்தைகள், நம் அருகே வந்து, திரைப்படத்தையும் ரசனையோடு பார்பார்கள். அத்துடன் ஆர்வக் கோளாறில் ஏதேனும் ஒரு கீயை அழுத்துவார்கள். இதனால் படம் இயங்குவது நின்று போகலாம்.

அலுவலகத்தில் முக்கியமான பைல் ஒன்றை இயக்குகையில் சிறிது தூரம் நடந்து சென்று போன் ஒன்றில் பேச வேண்டிய திருக்கும். அல்லது அடுத்த அறையில் முக்கியமான பைல் ஒன்றை எடுத்து வர வேண்டியதிருக்கும். 

அந்நேரத்தில்,அலுவலக சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் தெரிந்த ஒருவர், உங்கள் கீ போர்டின் மூலம், கம்ப்யூட்டரில் உள்ள பைலைத் திறக்கலாம்; அல்லது எடிட் செய்திடலாம். இதனைத் தடுக்க உங்கள் கம்ப்யூட்டரின் கீ போர்டை லாக் செய்திடலாம். 

நாம் பெரிய பைல் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். அதற்கு 30 நிமிடங்கள் ஆகலாம். இதற்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, மானிட்டரைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. நகர்ந்தால், கீ போர்டை யாராவது கையாண்டு, டவுண்லோட் செய்வதனை, அவர்கள் அறியாமலேயே கெடுத்துவிடலாம். இங்கும் கீ போர்டினை லாக் செய்திடும் அவசியம் நமக்கு நேர்கிறது.

இந்த தேவைகளுக்கான தீர்வை கிட் கீ லாக் (Kidkey Lock)   என்னும் புரோகிராம் தருகிறது. இது இணையத்தில் இலவசமாக 746 கேபி என்ற அளவில் கிடைக்கிறது.இதனைப் பெற  http://kidkeylock.en.softonic.com  என்ற முகவரிக்குச் செல்லவும்.

டவுண்லோட் செய்து பதிந்த பின்னர், இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. இதனை இயக்கி, நாம் எதனை எல்லாம் லாக் செய்திட வேண்டும் என விரும்புகிறோமோ அதற்கேற்ற வகையில் பாக்ஸ்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். கீ போர்டு மட்டுமின்றி மவுஸ் இயக்கமும் பூட்டப்படுகிறது. 

இந்த புரோகிராமினை இயக்க இரண்டு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டும். ஒன்று இதனை செட் செய்திட; மற்றொன்று இதனை இயக்கிட. இயக்கத்தை நிறுத்தும் பாஸ்வேர்டினை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாமும் கீ போர்டினை இயக்க முடியாது. அந்நேரத்தில் மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குவதே தீர்வாக முடியும்.

வகை வகையாய் வைரஸ்கள்

1.ADWARE:   

கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். 

இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies  என்பவையும் இதில் சேரும்.

2. BACKDOOR SANTA

இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். 

நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.  Alexa   மற்றும்  Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs  சென்று அதனை நீக்கவும்.

3. BHO: 

 இதனை விரித்தால்  Browser Helper Object  என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.

4.  BLENDED THREAT:  

கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.

5. BOTNETS:  

குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ  ("robot network")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

6.  BROWSER HIJACKER:   

இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. 

அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.

7.  ADWARE COOKIES:  : 

பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. 

இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  Adware Cookies  எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.

8. DIALERS:  

ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். 

பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.

7. GRAYWARE:  

இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.

8. KEYLOGGERS: 

நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். 

நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.

9. MALWARE: 

Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம். 

10. STALKING HORSE:  : 

இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.
Related Posts with Thumbnails