தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு மிர்ச்சி சிவா நடித்திருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை டைரக்டர் புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளனர். வித்தியாசமான வ குவாட்டர் கட்டிங் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :-
* ஒரு இரவில், சென்னையில் நடக்கும் கதைதான் வ குவாட்டர் கட்டிங் படத்தின் மொத்த கதையும்.
* தமிழ்ப்படம் சிவா நாயகனாகவும், லேகா வாஷிங்டன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
* கோவையில் இருந்து சென்னைக்கு வரும் சிவா, தன் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண் வீட்டில் தங்கி, அடுத்த நாள் சவுதிக்கு போக வேண்டும். அந்த ஒரு நாள் ராத்திரியில் மாலை 6.30 மணி முதல் காலை 6.30 மணி வரை நடக்கும் கதையை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி தம்பதிகள்.
* படத்தின் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன். விஜய் ரசிகராக நடிக்கிறார். எனவே தனது பெயரை சுரா என சுருக்கிக் கொள்வாராம்.
* தமிழ்ப்படம் போல் எந்த கலாய்ப்பும் இல்லாத, சுத்த காமெடி படமாம் இந்த வ குவாட்டர் கட்டிங். பெரிய மெசேஜ் எதுவும் இல்லாமல் ஒரு ஜாலியான படம்.
* ஆர்யா - பூஜா நடித்த ஓரம் போ திரைப்படத்திற்கு பிறகு கணவன் - மனைவியான புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கும் 2வது படம் இது.
* படத்தில் ஆங்காங்கே சந்திக்கும் சின்ன பிரச்னை எப்படி பெரிய பாதிப்பை தருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம்.
* ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 68 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டுள்ளது.
* 19 வயசு பொண்ணு, 12ம் வகுப்பு படிக்கிறது, 3 முறை பெயில் ஆகி, தற்கொலைக்கு முயற்சி பண்ணுவது போன்ற இயல்பான காட்சிகள் படத்தில் உள்ளனவாம்.
* டான்ஸ் மாஸ்டர் கல்யாண், நடனம் அமைத்துக் கொடுத்திருப்பதுடன், சொக்கத் தங்கள் என்ற பெயரில் அரசியல்வாதியாகவும் நடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார்.
* சுரா வாக வரும் சிவாவின் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண், மார்த்தண்டன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளாராம். படத்திற்காக 20 கிலோ எடை போட்டு அந்த கேரக்டரை நிஜமாக கொண்டு வந்திருக்கிறாராம் அவர்.
* எல்லா படங்களும் வித்தியாசமான லவ் ஸ்டோரி, வித்தியாசமா எடுத்திருக்கோம்னு சொல்வாங்க, ஆனா இந்த படத்தை பார்த்தா உங்களுக்கே வித்தியாசமான படமா இருக்கேன்னு சொல்லத் தோணும் என்கின்றனர் படத்தி்ன் டைரக்டர்களான புஷ்கர் - காயத்ரி தம்பதியர்.
0 comments:
Post a Comment