படத்தின் தலைப்பில் இருப்பதுபோல தனக்கும் எக்ஸ்ட்ராவாக ஒரு அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த ஹீரோ படுத்தும்பாட்டைத்தான் ஒட்டுமொத்த யூனிட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறது.
தொட்டதிற்கெல்லாம் அந்த வாரிசு நாயகன் மூக்கை நுழைப்பதுடன், குறை சொன்னதால் கடுப்பான முன்னணி ஆர்ட் டைரக்ரட் தோட்டா தரணியே பேக்கப் சொல்லி விலகி விட்டார் படத்தில் இருந்து. முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன்.
பெரிய பெரிய நடிகர்களே என்னை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை.
அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை" என்று கூறி விலகிவிட்டார் தோட்டா.
0 comments:
Post a Comment