ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பிளை மொபைல், அண்மையில் தன் புது மொபைல் போன் பிளை போன் தியேட்டர் என்னும் மாடலை (எம்.வி.135) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இதில் 3ஜிபி, ஏவிஐ மற்றும் எம்பி4 ஆகிய பார்மட்களில் அமைந்த வீடியோ படங்களை, நொடிக்கு 20 முதல் 25 பிரேம்கள் வரை இயக்கலாம். மொபைல் போன்கள் தொலை தொடர்பு சாதனமாக மட்டும் இயங்காமல், நல்லதொரு டிஜிட்டல் பொழுது போக்குக் கருவியாகவும் மாறி வருகிறது என்பதற்கு இந்த மாடல் போன் ஓர் எடுத்துக் காட்டு.
டெக்ஸ்ட் மெசேஜ்களைக் கையாள்வதிலும் இதில் புதிய வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, 2.4 அங்குல வண்ணத்திரை, 2.5 மிமீ ஆடியோ இணைப்பு, நேரம் குறித்து பதியக்கூடிய வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, எப்.எம். அலாரம், பதிந்தே கிடைக்கும் கேம்ஸ், 1000 எஸ்.எம்.எஸ். மற்றும் 2000 முகவரிகளைக் கொள்ளும் இடம், 9.9 எம்.பி. நினைவகம், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை இந்த போனின் மற்ற அம்சங்களாகும்.
இந்த போனின் விலை ரூ.3,949 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் மொபைல் போன்களை வடிவமைப்பதில் முன்னோடியாகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள பிளை மொபைல், பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெரிடியன் மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனமாகும். இந்தியா உட்பட 25 ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது இயங்கி வருகிறது.
0 comments:
Post a Comment