விஜய்க்கு ‌நோ ; ஆர்யாவுக்கு ‌யெஸ்!

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பது தெரிந்த சங்கதிதான். இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க சிம்பு, மாதவன் ஆகியோரிடம் கேட்கப்பட்டது. இருவருமே மறுத்து விட்டனர்.

இத்தனைக்கும் இந்தி த்ரீ இடியட்ஸில் மாதவனும் ஒரு இடியட்டாக நடித்திருந்தார். தமிழில் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கும் த்ரீ இடியட்ஸில் ஏனோ மாதவன் நடிக்க மறுத்து விட்டார். அதேநேரம் லிங்குசாமியின் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கும் வேட்டை படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாதவன் சம்மதித்திருக்கிறாராம்.

ஏன் விஜய்க்கு நோ ; ஆர்யாவுக்கு மட்டும் யெஸ்? என்று மாதவனிடம் கேட்டால், எனக்கு இதமாதிரி வித்தியாசமான ரோலில் நடிக்க ஆசை. இதுமாதிரி கேரக்டர்கள்தான் பேசப்படும் என நழுவுகிறார். படத்தில் ஆர்யாவின் சகோதரனாக நடிக்கிறாராம் மாதவன்.

சாக்லெட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் நாயகனாக மாற்றிய பெருமை டைரக்டர் லிங்குசாமியையே சேரும். அதனால்தான் லிங்குசாமியின் வேட்டையில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க மாதவன் சம்மதித்திருப்பார் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம் வட்டாரம். அப்போ விஜய்யுடன் நடிக்க மறுத்ததற்கு காரணம்?

1 comments:

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil

www.cineikons.com

Post a Comment

Related Posts with Thumbnails