மைக்ரோமேக்ஸ் க்யூ 7

பயன்படுத்த மிக வசதியான வடிவமைப்பு, எளிதாக வழி காட்டும் பயனாளர் இடைமுகத் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடீயோ பைல் இயக்கத் திறன், துல்லியமான இசை வெளிப்பாடு, எளிதாக அமைத்துக் கொள்ளும் வகையில் வை–பி இணைப்பு, கேமரா எனப் பல நல்ல அம்சங்களுடன் வந்துள்ளது.

இரண்டு சிம் இயக்கம் கொண்ட மைக்ரோமேக்ஸ் க்யூ7. கீ பேடின் பின்புற வெளிச்சம் சில வேளைகளில் சூரிய வெளிச்சத்தில் கீ பேட் பயன் படுத்துவதற்கு இடையூறாக உள்ளது. 100 கிராம் எடையில், நல்ல தெளிவான சதுர வடிவிலான பார் வகை போனாக இது உரு பெற்றுள்ளது.

முந்தைய மைக்ரோமேக்ஸ் போன்களைக் காட்டிலும் இதன் திரை வெளிப்பாடு தெளிவாகவும், பளிச் என்றும் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், பவர் ஸ்லாட், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை பயன்படுத்த எளிதான இடத்தில் அமைந்துள்ளன.

இதில் உள்ள ஜாவா ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பயன் படுத்து வதனையும், மெனு மாற்றத்தினையும் மிக மிக எளிமையுடன் தருகிறது. ஆடியோ மற்றும் வீடியோ மிகவும் துல்லியமான ஒலியுடனும், காட்சியுடனும் அமைந்துள்ளது.

எப்.எம். ரேடியோ பயன்பாடும் இதே சிறப்புடன் இருக்கிறது. ஆனால் பதிவு செய்யக் கூடிய வசதி தரப்படாதது சற்று ஏமாற்றமே. வீடியோவைப் பொறுத்தவரை எம்பி4, 3ஜிபி, ஏ.வி.ஐ. மற்றும் எப்.எல்.வி பார்மட்டுகளைக் கையாள்கிறது.

இரண்டு அடி சுற்றளவில் ஏற்படும் ஒலியினை மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது. வழக்கமான அலாரம், உலக கடிகாரம், செயல் மேற்கொள்ள நினைவுபடுத்தும் பட்டியல் அமைத்தல், இ–புக் ரீடர், ஸ்டாப் வாட்ச், திருட்டு தடுப்பு, அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். பிளாக் லிஸ்ட் ஏற்படுத்துதல் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலை போனாக இருந்தாலும், வை–பி இணைப்பு வசதி தரப்பட்டுள்ளதுதான் இந்த போனின் கூடுதல் சிறப்பாகும். வை–பி இல்லாத இடங்களில் EDGE/GPRS/WAP சேவைகளைப் பயன்படுத்தலாம்.

இதில் தரப்பட்டுள்ள பிரவுசருக்குப் பதிலாக, ஆப்பரா பிரவுசரைப் பயன்படுத்துவது சிறப்பான பயன்பாட்டினைத் தரும். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 4.5 மணி நேரம் தொடர்ந்து பேச மின்சக்தி தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிம் பயன்பாட்டில், மேலே குறிக்கப்பட்டுள்ள சிறப்பான வசதிகளுடன், இந்த போனின் விலை ரூ. 4,800 எனக் குறிக்கப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பாகும்.

1 comments:

ம.தி.சுதா said...

சகோதரா நான் இலங்கையைச் சேர்ந்தவன் எனது பிளக்பெரி 8220 pearl வகை போனாகும்… இதில் இணையம் பாவிப்பதானால் சாதாரண போனில் பாவிப்பது போல் பாவிக்க முடியாதாம்.. இதற்கென ஒரு மாதாந்தக் கட்டண சேவை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டள்ளதாம்.. அதுவும் பெரும் தொகைக் கட்டண செவையாகும்… அவர்கள் சரியான விளக்கம் தரவில்லை…. இந்த போனில் manual ஆஹா gprs setting எப்படி செய்வது என்றும் தெரியவில்லை.. அதனால் மற்றைய போன்களில் செய்வது போல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர் பாவிக்க முடிவதில்லை.
எனக்கு manual ஆஹா gprs setting எப்படிச் செய்யலாம் என்று தெரிந்தாலே போதும்.. முடிந்தால் உதவுங்களேன்...

Post a Comment

Related Posts with Thumbnails