நடிகர் விஜய்யின் 51வது படமாக உருவாகி வரும் காவலன் டிசம்பரில் ரீலிஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி விருந்தாக காவலன் படம் வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளது.
காவல் காரன், காவல் காதல் என பல தலைப்புகளுக்கு பிறகு காவலன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை டைரக்டர் சித்திக் இயக்கி வருகிறார். இறுதிகட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் டைரக்டர் சித்திக், இப்படத்திற்காக நடிகை அசின் கொடுத்த தேதிகளை வைத்துக் கொண்டு மளமளவென சூட்டிங்கை முடித்து வருகிறார்.
காரைக்குடி, கும்பகோணம், வேலூர், மலேசியா, பாங்காக் என 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்டமாக கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த காவலன் டீம் திட்டமிட்டுள்ளது.
டிசம்பரில் காவலனை அதிரடியாக திரையிடும் திட்டத்துடன் விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றனவாம்.
All the best Thalaiva
ReplyDeleteதமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் படத்தைத் திரையிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததே! ஐயோ! அது என்னவாயிற்று?
ReplyDeletethalaiva neenga thool kilappunga
ReplyDelete