சொந்த படம் எடுக்கிறார் அஜித்

அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜித் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பின் நடிகராக மட்டுமே இருந்து வந்தார் அஜித். தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் அஜித்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு குட்வில் என்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயர் சூட்டியிருக்கிறார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் தல.

எனது நண்பர்களுக்கும் குட்வில்லில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அஜித்திடம், இளைய தளபதி விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என்றால்... கண்டிப்பாக அந்த எண்ணம் உண்டு என்று சிம்பிளாக பதிலளித்தார் தல. தற்போது தனது நிறுவனத்திற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார் அஜித்.
Related Posts with Thumbnails