இன்று உலகையை தன்னுள் முடக்கிப் போட்டிருக்கும் பேஸ்புக் தளத்தை மையமாகக் கொண்டு ஹாலிவுட்டில் தி சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் புதிய படமொன்று உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை தி ஆக்சிடெண்டல் பில்லியன்ர்ஸ் என்கிற புத்தகத்தை தழுவி உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் ஆரோன் சார்க்கின்.
சைபர் உலகின் இந்நூற்றாண்டு அதிசயமான ஃபேஸ்புக் செய்யும் ஆக்கம் மற்றும் அழிவினை சொல்லும் படமாக இது இருக்கும். இது வரமா? சாபமா? என்பதை கதை முடிவு சொல்லும்.
படத்தை இயக்கியுள்ளவர் டேவிட் பிஞ்ச்சர். இவர் ஏலியன், செவன், ஃபைட் க்ளப், ஸோடியா போன்ற படங்களை கொடுத்தவர்.
கோல்டன் குளோபல் உட்பட பல விருதுகளைக் குவித்தவர். மார்க்காக நடித்துள்ளவர் ஜெஸ்ஸி ஈசன் பொக்.
ஆண்ட் ரூ கார் ஃபீல்டு, ஜாஸ்டின் டிம்பர் லேக், ஆர்மி ஹாமர், ஜோஷ் பென்ஸ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் வருகிறார்கள். பேஸ்புக்கின் ஆக்கம் அழவுகள் பற்றி இளையதலைமுறையினருக்கு எச்சரிக்கிற படமாக தி சோஷியல் நெட் ஒர்க் இருக்கும் என கருதப்படும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிகிறது. நாளை (12ம்தேதி) ரீலிஸ்.
0 comments:
Post a Comment