மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகையாக நடிக்கிறார். 

கதைப்படி நடிகை நிஷா ஒரு கவிதை எழுதுகிறார். அது பாடலாக இடம்பெறுகிறது. அந்த கவிதையை நிஜமாக எழுதியவர் நடிகர் கமல்ஹாசன். 

கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்... எனத் தொடங்கி தொடரும் அந்த பாடல் கமல்ஹாசனை ஒரு கவிஞராக மீண்டும் நிரூபித்திருக்கிறது.

கமல்ஹாசன் எழுதிய அந்த பாடல் வரிகள் வருமாறு:-


கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றைஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.

டைட்டிலுக்காக புதுமுகத்தை மிரட்டும் பிரபல டைரக்டர்!

தான் விரும்பிய டைட்டிலை வேறொரு புதுமுகம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதையறிந்த பிரபல டைரக்டர் அந்த புதுமுக டைரக்டரை மிரட்டி வருகிறாராம். 

ஏற்கனவே 10 படங்களை இயக்கியிருக்கும் அந்த டைரக்டர் தற்போது மருமகன் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்திற்கு முதலில் அருவா என பெயர் சூட்டியிருந்தனர். 

ஆனால் படத்தின் நாயகனுக்கோ வேறொரு தலைப்பின் மேல் ஈர்ப்பு. நாயகன் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அந்த தலைப்பை பதிவு செய்ய முற்பட்டபோதுதான் தெரிந்தது, நாயகனின் விருப்ப தலைப்பு வேறோரு புதுமுக டைரக்டரின் கையில் இருக்கிறது என்று. 

உடனடியாக அந்த புதுமுகத்திடம் போனில் பேசிய டைரக்டர், தனக்கு அந்த ‌தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் புதுமுகமோ... வாய்ப்பே இல்லை. எனது படத்திற்கு அந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும், என்று கூறி மறுத்து விட்டாராம்.

விட்டாரா டைரக்டர்...? ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என மிரட்டத் தொடங்கி விட்டார். அதேநேரம் புதுமுகமோ, நீங்க எவ்வளவு மிரட்டினாலும் அந்த டைட்டிலை தர முடியாது என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் இப்போது இந்த பிரச்னை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறதாம். 

கமல்ஹாசன் பாணியில் இளம் ஹீரோக்கள்!

தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள்.


இன்றைய இளம் ஹீரோக்கள் தங்கள் படங்களில் வேறொரு ஹீரோ நடிப்பதை அனுமதிக்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், மல்லுவுட்டைப் போல மூத்த நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை.


தமிழ் சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கூறுவதுடன், தனது படங்களில் இளம் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைப்பார். பஞ்சதந்திரம், தெனாலியில் ஜெயராம், அன்பேசிவம் படத்தில் மாதவன், காதலா காதலாவில் பிரபுதேவா, குருதிப்புனலில் அர்ஜூன் என சக கலைஞர்களை நடிக்க வைத்தார். தற்போது அவர் நடித்து வரும் மன்மதன் அம்புவில் கூட மாதவன் இருக்கிறார்.

இப்போது கமல்ஹாசன் பாலிஸியை பின்பற்ற தயாராகியிருக்கிறார்கள் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் ஆகியோர். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்தில்தான் இந்த மூன்று நட்சத்திரங்களும் இணைகின்றன.


இந்த படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டிசம்பர் 6ம்‌தேதி படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.

சிங்கப்பூரில் மன்மதன் அம்பு பாடல் வெளியீடு

கமல், திரிஷா, மாதவன் இணைந்து நடித்துள்ள படம் மன்மதன் அம்பு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி உள்ளார். டிசம்பர் 17-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதன் பாடல் சி.டி. வெளி யீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்துகின்றனர். வருகிற 20-ந் தேதி இவ்விழா நடக்கிறது. 7 ஆயிரம் ரசிகர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

3 மணி நேரம் விழா நடைபெறுகிறது. முன்னதாக 14-ந் தேதி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கமலஹாசன், மாதவன்- திரிஷா, சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொள்கின்றனர்.


நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், நடிகர் -நடிகைகள் பலர் சிங்கப்பூர் செல்கிறார்கள். விஜய் டி.வி. இதனை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மந்திர புன்னகை - முன்னோட்டம்

டைரக்டர் கரு.பழனியப்பன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மந்திர புன்னகை. இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கும் கரு.பழனியப்பன் தனது 5வது படமான மந்திர புன்னகையை இயக்கி, நடிக்கிறார்.

படத்தில், காதலாலும் கறைக்கமுடியாத, ஒரு கனத்த இதயத்துடன் இருக்கும் ஒரு இளைஞனாக கரு.பழனியப்பன் நடித்திருக்கிறாராம். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களுக்கும், பசி, கோபம், அழுகை, சிரிப்பு, ஆசை, காமம், காதல், அன்பு என்று ஆதார உணர்ச்சிகள் ஒன்றுதான்.

ஆனால் இந்த உணர்ச்சிகளுக்கான காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அப்படி பார்க்கும்போது இந்தப் பூமிப் பந்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம்தான்.

அப்படி தனெக்கென ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதைதான் மந்திரப்புன்னகை.

கரு.பழனியப்பனுக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், மகேஸ்வரி, ரிஷி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிக்க, இயக்குநர் நகுலன் பொன்னுசாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கவிஞர் அறிவுமதி இப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார். இவருடன் யுகபாரதி, விவேகா ஆகியோரும் பாடல்கள் எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ராம்நாத் ஷெட்டி ஓளிப்பதிவு செய்ய, கலையை ராஜீவனும், படத்தொகுப்பை ராஜா முகம்மதுவும் செய்கிறார்கள்.

இந்திரா பிக்சர்ஸ் சார்பில் நாகராஜன் - கார்த்திக் நாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங், சென்னையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நடந்துள்ளது.

திருட்டு விசிடியை ஒழிக்க கமல்ஹாசன் சொல்லும் ஐடியா!

மக்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.

திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கமல்ஹாசன், திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.

திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும், என்று கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில் நடிக்கப்போவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஷங்கர் இயக்கும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தில் நான் நடிப்பதாக செய்தி வெளியானதாக நானும் கேள்விப்பட்‌டேன். ஆனால் ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை, என்றார்

ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படம்

ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் உள்ளார். விஜய் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படம் முடிந்ததும் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை துவங்குவார் என்றும் செய்திகள் பரவின.

இதுபற்றி ஐதராபாத்தில் கமலிடம் நிருபர்கள் நேற்று பேட்டி கண்டனர். நீங்களும், ரஜினியும் சேர்ந்து நடிக்க ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:-


ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படமொன்றில் ரஜினியும், நானும் அதில் நடிக்கிறோம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ஐதராபாத்தில் பிக்கி மீடியா மாநாட்டை டிசம்பர் 1, 2 தேதிகளில் நடத்த உள்ளோம். 2 ஆயிரம் பிரதிநிதிகள் அதில் பங்கேற்கின்றனர்.

திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.

திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக்கை மையமாக கொண்டு உருவான சினிமா!

இன்று உலகையை தன்னுள் முடக்கிப் போட்டிருக்கும் பேஸ்புக் தளத்தை மையமாகக் கொண்டு ஹாலிவுட்டில் தி சோஷியல் நெட்‌வொர்க் என்ற பெயரில் புதிய படமொன்று உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை தி ஆக்சிடெண்டல் பில்லியன்ர்ஸ் என்கிற புத்தகத்தை தழுவி உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் ஆரோன் சார்க்கின்.

சைபர் உலகின் இந்நூற்றாண்டு அதிசயமான ஃபேஸ்புக் செய்யும் ஆக்கம் மற்றும் அழிவினை சொல்லும் படமாக இது இருக்கும். இது வரமா? சாபமா? என்பதை கதை முடிவு சொல்லும்.

படத்தை இயக்கியுள்ளவர் டேவிட் பிஞ்ச்சர். இவர் ஏலியன், செவன், ஃபைட் க்ளப், ஸோடியா போன்ற படங்களை கொடுத்தவர்.

கோல்டன் குளோபல் உட்பட பல விருதுகளைக் குவித்தவர். மார்க்காக நடித்துள்ளவர் ஜெஸ்ஸி ஈசன் பொக்.

ஆண்ட் ரூ கார் ஃபீல்டு, ஜாஸ்டின் டிம்பர் லேக், ஆர்மி ஹாமர், ஜோஷ் பென்ஸ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் வருகிறார்கள். பேஸ்புக்கின் ஆக்கம் அழவுகள் பற்றி இளையதலைமுறையினருக்கு எச்சரிக்கிற படமாக தி சோஷியல் நெட் ஒர்க் இருக்கும் என கருதப்படும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிகிறது. நாளை (12ம்தேதி) ரீலிஸ்.

டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ்

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய்.

மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடங்குகிறார் ஷங்கர்.

மகேஷ் பாபுவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக 3 இடியேட்ஸ் படத்தை முதலில் தெலுங்கில் தொடங்குகிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

மைனா - விமர்சனம்

மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்!

இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.

மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!

சம்பளம் குறைத்து வாய்ப்பு தேடும் ஹீரோ

"உன்னாலே உன்னாலே", "ஜெயம் கொண்டான்", "மோதி விளையாடு" உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஹீரோ வினய்க்கு பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இத்தனைக்கும் காரணம் வினய் கேட்டு வந்த அதிகப் படியான சம்பளம் தான். இதன் விளைவு தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிட்டவில்லை...என்பதை உணர்ந்த வினய், அதிரடியாக சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது, "சாக்லெட்" பட அதிபரும், "மதுர" பட இயக்குநருமான மாதேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சம்பளத்தை குறைத்துள்ளதால் தொடர்ந்து புதிய பட வாய்‌ப்புகள் வாயிற் கதவை தட்டும் என நம்புகிறார் வினய் ! இப்பொழுதாவது புத்தி வந்ததே !!
Related Posts with Thumbnails