20 ஆண்டுக்கு முந்தைய நிலை திரும்பியது

உலகம் முழுவதும் 100 கோடி பேர் பட்டினி கிடப்பதாக ஐ.நா. சபை கூறியுள்ளது. இதுபற்றி ஐ.நா. சபை உலக உணவு திட்ட நிர்வாக இயக்குனர் ஜோஸ்டிசிரன் கூறியதாவது:-

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகள் காரணமாக உலக உணவு திட்டத்துக்கு போதிய நிதி உதவி கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு இந்த திட்டத்துக்கு 670 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 260 கோடி டாலர் தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு திட்டத்தை சரியாக நிறை வேற்ற முடியும்.

உலகில் வறுமை நிலை 20 ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு சென்றுள்ளது இதனால் இந்த ஆண்டு உலகம் முழுவதும் 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது. எனவே இதை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது.

அடுத்த 2 ஆண்டுக்கு இதே நிலை நீடிக்கும் இதை சமாளிக்க 670 கோடி டாலர் மேலும் அதிகம் தேவைப்படுகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails