Sunday, October 31, 2010

வ குவாட்டர் கட்டிங் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு மிர்ச்சி சிவா நடித்திருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை டைரக்டர் புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளனர். வித்தியாசமான வ குவாட்டர் கட்டிங் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்‌ஸ் :-

* ஒரு இரவில், சென்னையில் நடக்கும் கதைதான் வ குவாட்டர் கட்டிங் படத்தின் மொத்த கதையும்.

* தமிழ்ப்படம் சிவா நாயகனாகவும், லே‌கா வாஷிங்டன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

* கோவையில் இருந்து சென்னைக்கு வரும் சிவா, தன் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண் வீட்டில் தங்கி, அடுத்த நாள் சவுதிக்கு போக வேண்டும். அந்த ஒரு நாள் ராத்திரியில் மாலை 6.30 மணி முதல் காலை 6.30 மணி வரை நடக்கும் கதையை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி தம்பதிகள்.

* படத்தின் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன். விஜய் ரசிகராக நடிக்கிறார். எனவே தனது பெயரை சுரா என சுருக்கிக் கொள்வாராம்.

* தமிழ்ப்படம் போல் எந்த கலாய்ப்பும் இல்லாத, சுத்த காமெடி படமாம் இந்த வ குவாட்டர் கட்டிங். பெரிய மெசேஜ் எதுவும் இல்லாமல் ஒரு ஜாலியான படம்.

* ஆர்யா - பூஜா நடித்த ஓரம் போ திரைப்படத்திற்கு பிறகு கணவன் - மனைவியான புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கும் 2வது படம் இது.

* படத்தில் ஆங்காங்கே சந்திக்கும் சின்ன பிரச்னை எப்படி பெரிய ‌பாதிப்பை தருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம்.

* ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 68 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டுள்ளது.

* 19 வயசு பொண்ணு, 12ம் வகுப்பு படிக்கிறது, 3 முறை பெயில் ஆகி, தற்கொலைக்கு முயற்சி பண்ணுவது போன்ற இயல்பான காட்சிகள் படத்தில் உள்ளனவாம்.

* டான்ஸ் மாஸ்டர் கல்யாண், நடனம் அமைத்துக் கொடுத்திருப்பதுடன், சொக்கத் தங்கள் என்ற பெயரில் அரசியல்வாதியாகவும் நடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார்.

* சுரா வாக வரும் சிவாவின் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண், மார்த்தண்டன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளாராம். படத்திற்காக 20 கிலோ எடை போட்டு அந்த கேரக்டரை நிஜமாக கொண்டு வந்திருக்கிறாராம் அவர்.

* எல்லா படங்களும் வித்தியாசமான லவ் ஸ்டோரி, வித்தியாசமா எடுத்திருக்கோம்னு சொல்வாங்க, ஆனா இந்த படத்தை பார்த்தா உங்களுக்கே வித்தியாசமான படமா இருக்கேன்னு சொல்லத் தோணும் என்கின்றனர் படத்தி்ன் டைரக்டர்களான புஷ்கர் - காயத்ரி தம்பதியர்.

Saturday, October 30, 2010

கம்‌பெனிக்கு பூட்டு போடத் தயாராகும் இயக்குனர்!

பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த அந்த இயக்குனர் சமீபத்தில் எந்திரமான படத்தை இயக்கி முடித்த கையோடு, தனது சொந்த பட கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்த்திருக்கிறார்.

பெயர் சொல்லுகிற மாதிரி படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் அந்த நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் லாபத்தை விட நஷ்டம் தலைதூக்கி நிற்கிறதாம்.

மூன்று முக்கியமான படங்களால் மட்டும் ரூ.9 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருக்கும் அந்த கம்பெனியை இனியும் ‌தொடர வேண்டுமா? என்ற யோசனையில் மூழ்கியிருக்கும் பிரமாண்ட இயக்குனர், விரைவில் கம்பெனிக்கு பூட்டு போடப் போவதாக சொல்கிறது கோடம்பாக்க தகவல்.

அநேகமாக கம்பெனியின் கடைசிப்படம் அன்நதபுரத்து வீடாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Thursday, October 28, 2010

பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

பிரமாண்ட டைரக்டர் என்ற பெயரெடுத்த அந்த இயக்குனர், இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 3 முட்டாள்கள் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டதும், இதற்கான நடிகர்கள் - நடிகைகள் தேர்வு நடைபெற்றதும் தெரிந்த சங்கதிதான்.

என்ன காரணத்தினாலோ அந்த படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி நிறுவனம் தயாரிப்பு முயற்சியை சற்று தள்ளிப் போட்டிருக்கிறதாம்.

அதுவரை இளைய தளபதியின் தேதிகளை வீணடிக்க விரும்பாத பிரமாண்டம், அவரை வைத்து மசாலா படம் ஒன்றை இயக்க அவசர முடிவு எடுத்திருக்கிறாராம்.

இந்த மசாலா படத்தில் ஏற்கனவே நடிக்கவிருந்தவர் ஜீவமான இளம் நடிகர்தானாம். இந்த தகவல் அறிந்த ஜீவ நடிகர் அதிர்ச்சியடைந்து, விஜயத்தை நேரில் சென்று பார்த்து பேசியிருக்கிறார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஓருவேளை படத்தில் 2 பேரும் சேர்ந்து நடிக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Wednesday, October 27, 2010

டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல கதைக்காக காத்திருந்து நடித்து வருகிறார்.

இயக்குனர் துறையில் தனக்குள்ள அனுபவம் தான் நடிக்கும் படங்களில் தெரிய வேண்டும் என நினைக்கும் அந்த தம்பி நடிகர் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கொஞ்சம் ஓவராகவே மூக்கை நுழைக்கிறாராம்.

எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதால் படத்தின் டைரக்டர் ரொம்பவே அப்செட். சமீபத்தில் படத்தில் இடம்பெறப் போகும் பாடல் என்று கூறி ஒரு பாடலை நாயகனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

பாடலை கேட்ட ஹீரோ, இந்த பாட்டு வேணாம் என்று சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியுடன் கூடி ஆக்ரோஷத்தில் இருக்கிறதாம் இயக்குனர் தரப்பு.

ஏற்கவே இந்த தம்பி நடிகரின் அண்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக பில்ட்-அப் கொடுப்பதால் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்கள் அவஸ்தை பட்டு வருதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தம்பியும், அண்ணன் வழியில் தன்னை மாற்றிக் கொண்டிருப்பது எங்கே போய் முடியுமோ? என புலம்புகிறார்கள் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்.

Tuesday, October 26, 2010

திருட்டு கதையில் உருவான எந்திரன்

எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது.

சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்தில் நானும் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் தனது கதை வெளியாகி இருந்த பத்திரிகையின் நகலையும் ஆரூர் தமிழ்நாடன் இணைத்திருந்தார். கமிஷனரிடம் அளிக்கப்பட்ட புகார் குறி்தது அமுதா தமிழ்நாடன் கூறுகையில், "இரண்டு முறை இந்த சிறுகதை வெளிவந்துள்ளது. முதலில் நண்பர்கள் கூறியதை நான் நம்பவில்லை.

நான் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதுகுறித்து சிவில் வழக்கு தொடரப்படும். இப்பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாகவும், சைபர் கிரைம் பிரிவில் விசாரிக்கும்படி பரிந்துரை செய்தும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

அமுதா தமிழ்நாடனின் வக்கீல் எட்விக் அளித்த பேட்டியி்ல, காப்புரிமை சட்டத்தை அவர்கள் மீறியுள்ளனர் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இது கிரிமினல் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு. இதுதவிர சிவில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.

இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு மொழியில் வெளியாகி இருக்கும் `எந்திரன் சினிமாவை எதிர்த்தும் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

Saturday, October 23, 2010

நயன்தாராவின் நடிப்பு நச்சரிப்பு ! பிரபுதேவா கடுப்பு !!

நயன்தாராவிற்கு பிரபுதேவாவுடன் காதல் கல்யாணத்தை நோக்கி போய் கொண்டிருப்பதும், பிரபுதேவாவின் முதல் மனைவி இவர்கள் மீது கோர்ட்டு கேஸூ என அலைந்து கொண்டிருப்பதும் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நயன் நடித்து சமீபத்தில் ரிலீஸான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் படுசூப்பராக ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து தொடர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை நயனுக்கு அதிகம் இருக்கிறதாம்.

ஆனால், பிரபுதேவாவோ அவரது ஆசைக்கு தொடர்ந்து தடை போட்டு வருகிறாராம். உன்னால ஃபீல்டுல நிலைத்து நிற்க முடியும்; காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என நயனின் தோழிகள் தொடர்ந்து தூபம் போட்டுவருகிறதால் நயனும் தன் நடிப்பாசையை பிரபு தேவாவிடம் சொல்லி ஓ.கே., வாங்க ஒற்றை காலில் நிற்கிறாராம்.

ஒரு பக்கம் மனைவி ரமலத்தின் கோர்ட்டு கேஸூ பிரச்னை, மற்றொரு பக்கம் நயனின் நடிப்பு நச்சரிப்பு என படாதபாடு படுகிறாராம், மாஸ்டர்..பாவம் தான்!!

Friday, October 22, 2010

ஈசன் - முன்னோட்டம்

சுப்பிரமணியபுரம் படத்துக்கு பின் டைரக்டர் சசிகுமார் இயக்கும் படம் "ஈசன். சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார்கள். அபிநயா கதாநாயகியாக நடிக்கிறார்.

அபர்ணா என்ற புதுமுகம் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் குறித்து டைரக்டர் சசிகுமார் கூறுகையில், "ஈசன் என்பதற்கான காரணம் படம் பார்த்தால்தான் தெரியும். ஆக்கலும், அழித்தலும் செய்கிறவன் ஈசன். ஆனால் இதில் என்ன நடக்கிறது என்பது சஸ்பென்ஸ்.

பிழைப்பு தேடி வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாய் வாழ்பவர்கள் என சென்னை நகரத்தின் வாழ்வின் பிம்பங்கள்தான் இந்தக் கதை. நகர வாழ்க்கை மனிதர்களின் ஆயிரம் உணர்வுகள் இதில் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, அதை பின்னணியாக வைத்து படம் வந்திருக்கிறது. சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மந்திரியாக நடிக்கிறார், என்றார். ஈசனுக்கு ‌ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...