Saturday, October 16, 2010

பாலிவுட் நடிகருக்கு 15 நாள் சிறை

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம், பைக் ஓட்டுவதில் வல்லவர். இவர் மும்பையின் பந்திரா பகுதியில் நடைபெற்ற பைக் போட்டியில் 1100சிசி யமஹா பைக்கை வென்றுள்ளார்.

ஆனால் 2009ம் ஆண்டு ஜான் ஆப்ரகாம் பைக் விபத்து ஒன்றில் சிக்கினார். அந்த விபத்தில் ஜானின் பைக் மோதியதில் சைக்கிளில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவ்விபத்து தொடர்பாக ஜான் உடனடியாக கைது செய்யப்பட்டு, பின்னர் பெயிலில் வெளி வந்தார். இது தொடர்பாக வழக்கு மும்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் ஜான் ஆப்ரகாமிற்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜான் ஆப்ரகாமின் வக்கீல் மேல் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Friday, October 15, 2010

விஜய்க்கு ‌நோ ; ஆர்யாவுக்கு ‌யெஸ்!

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பது தெரிந்த சங்கதிதான். இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க சிம்பு, மாதவன் ஆகியோரிடம் கேட்கப்பட்டது. இருவருமே மறுத்து விட்டனர்.

இத்தனைக்கும் இந்தி த்ரீ இடியட்ஸில் மாதவனும் ஒரு இடியட்டாக நடித்திருந்தார். தமிழில் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கும் த்ரீ இடியட்ஸில் ஏனோ மாதவன் நடிக்க மறுத்து விட்டார். அதேநேரம் லிங்குசாமியின் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கும் வேட்டை படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாதவன் சம்மதித்திருக்கிறாராம்.

ஏன் விஜய்க்கு நோ ; ஆர்யாவுக்கு மட்டும் யெஸ்? என்று மாதவனிடம் கேட்டால், எனக்கு இதமாதிரி வித்தியாசமான ரோலில் நடிக்க ஆசை. இதுமாதிரி கேரக்டர்கள்தான் பேசப்படும் என நழுவுகிறார். படத்தில் ஆர்யாவின் சகோதரனாக நடிக்கிறாராம் மாதவன்.

சாக்லெட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் நாயகனாக மாற்றிய பெருமை டைரக்டர் லிங்குசாமியையே சேரும். அதனால்தான் லிங்குசாமியின் வேட்டையில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க மாதவன் சம்மதித்திருப்பார் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம் வட்டாரம். அப்போ விஜய்யுடன் நடிக்க மறுத்ததற்கு காரணம்?

Wednesday, October 13, 2010

சிடிஎம்ஏ ஐபோனை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், ரிலையன்ஸ் மற்றும் டாடா-டெலிசர்வீஸ் இரு பெரிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-போன் இந்தியாவில் வெளியிட இருப்பதாக தி வால்ஸ்டீரீட் பத்திரிக்கை ‌செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-போன் இந்தியாவில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடோபோன் குழுமம் வழங்குகின்றன. 2007ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன் மற்றும் டச்ஸ்கிரீன் போன் ஆகியவைகளை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

ஆனால் இந்தியாவில் இப்போது தான் ஸ்மார்ட்போன் ஆகியன மார்கெட்களிள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வளந்து வரும் மொபைல் தொழில்நுட்பதுறையில் ஒரு மாதத்தில் 18 மில்லியன் மக்கள் புதிய இணைப்பை பெறுகின்றனர். இந்தியாவில் 20 சதவீதம், 670 மில்லியன் மக்கள் சி.டி.எம்.ஏ., போன் உபயோகிக்கின்றனர்.

Tuesday, October 12, 2010

உலகின் முதல் 4ஜி மொபைல் போன்

ஸ்பிரிண்ட் மற்றும் ஹெச்டிசி நிறுவனங்கள் சேர்ந்து ஹெச்டிசி எவோ 4ஜி என்ற உலகின் முதலாவது 4ஜி மொபைல்போனை விளம்பரப்படுத்தியுள்ளன.

இது 3ஜி மொபைல்போன்களை விட 10 மடங்கு வேகம் கூடியதுடன்,படங்கள், பைல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நிமிடக்கணக்கில் அல்லாமல், செகண்ட்களில் டவுன்லோடு செய்யக்ககூடியதாக , அவ்வாறு தரவிரக்கப்பட்ட வீடியோக்களை 4.3 அங்குல அகலத்திரையில் காணக்கூடியதாகவும் உள்ளது.

ஹெச்டிசி எவோ 4ஜி மொபைல்போனில் அடங்கியிருப்பவை. : 1 ஜிபி ஸ்னாப்டிராகன் பிராசசர், 8 எம்பி கேமரா, மொபைல் ஹாட்ஸ்பாட் கேபபிலிட்டி கனெக்ட்ஸ் 8 வை பை என்ஏபிள்டு டி‌வைசஸ், ஹெச்டிஎம்ஐ கனெக்சன், ஜிபிஎஸ் நேவிகேசன், மைக்ரோஎஸ்டி சிலாட், 3.5 மிமமீ. ஜாக், டிஜிட்டல் கம்பாஸ், மோசன் சென்சார் மற்றும் ஹெச்டிசி சென்ஸ் உள்ளிட்டவைகள் இதன் சிறப்பம்சமாகும்.

Friday, October 8, 2010

இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன்

அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் (50), மரணம் அடைந்துவிட்டார்.

பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு.

1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் பிறந்தவர் ஜாக்சன். இவரது குடும்பம் சாதாரணமானது. வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். 11 வயதிலேயே அவரது சகோரர்களுடன் இணைந்து "தி ஜாக்சன் 5" இசை நிகழ்ச்சி மற்றும் ஆல்பங்களை வெளியிட்டார். "ஐ வான்ட் யூ பேக்" எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது.

சகோதரர்களுடன் தொடர்ச்சியான "ஹிட்' ஆல்பங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஜாக்சன், 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் "காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் "ஆப் தி வால்' எனும் "டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் "திரில்லர்' ஆல்பம், 1987ல் "பேட்' , 1991ல் "டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் "ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன.

1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். அப்போதுதான் எம்.டி.வி., உருவாகியிருந்த நேரம். இந்த "டிவி' ஜாக்சனின் நிகழ்ச்சியால் பிரபலம் அடையத் தொடங்கியது. "பீட் இட்", "பில்லி ஜீன்" மற்றும் "திரில்லர்" ஆகிய இசை நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் "ஹிட்" நிகழ்ச்சிகள்.

1990களில் "பிளாக் ஆர் ஒயிட்' மற்றும் "ஸ்கிரீம்" ஆகிய நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றன.
ஜாக்சனின் நடனம் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன் யாரும் அதுபோன்று நடனம் ஆடியது இல்லை. மிகவும் சிக்கலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் ஆடினார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.

உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது என ஜாக்சனின் புகழ் உச்சிக்கு சென்றது. அமெரிக்காவில் பாப், ராக் இசையில் 1980களில், மைக்கேல் ஜாக்சனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற அளவில் உயர்ந்தார்.

20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கியவர். ஆனால், அவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார்.

இந்த வீழ்ச்சிக்கு காரணம் அவர் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது, தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இடங்களில் புற்றுநோய் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் தனது இசை உலக மறு பிரவேசத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த மாதம் முதல், 2010ம் ஆண்டு வரை லண்டனில் 50 இசை கச்சேரிகளுக்கு அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இன்னொரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

1993ல் ஒரு பேட்டியில் தனது சிறு வயது கால அனுபவங்களை கூறியிருந்தார். அப்போது, அவர் தந்தை தன்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார், சித்திரவதக்கு உள்ளாக்கினார் என்பதை விவரித்தார். 2003ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்டார். என்றாலும் அவர், 2005ல் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பிரஸ்லி என்பவரை ஜாக்சன் 1996ல் திருமணம் முடித்தார். 1999ல் டெபோரா எனும் நர்சை மணம் முடித்துக் கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. என்றாலும், பின்னர் மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு பெண் குழந்தை, இரு ஆண் குழந்தை உள்ளனர். கடைசி மகனை (மைக்கேல் ஜாக்சன் 2) வாடகைத் தாய் உதவியுடன் பெற்றதாக கூறப்படுகிறது. மற்ற குழந்தைகள் (ஜோசப் ஜாக்சன் மற்றும் பாரிஸ் மிசேல் காதரின்) டெபோராவுக்கு பிறந்தவர்கள்

ஃப்ளை தியேட்டர் போன்

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பிளை மொபைல், அண்மையில் தன் புது மொபைல் போன் பிளை போன் தியேட்டர் என்னும் மாடலை (எம்.வி.135) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதில் 3ஜிபி, ஏவிஐ மற்றும் எம்பி4 ஆகிய பார்மட்களில் அமைந்த வீடியோ படங்களை, நொடிக்கு 20 முதல் 25 பிரேம்கள் வரை இயக்கலாம். மொபைல் போன்கள் தொலை தொடர்பு சாதனமாக மட்டும் இயங்காமல், நல்லதொரு டிஜிட்டல் பொழுது போக்குக் கருவியாகவும் மாறி வருகிறது என்பதற்கு இந்த மாடல் போன் ஓர் எடுத்துக் காட்டு.

டெக்ஸ்ட் மெசேஜ்களைக் கையாள்வதிலும் இதில் புதிய வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, 2.4 அங்குல வண்ணத்திரை, 2.5 மிமீ ஆடியோ இணைப்பு, நேரம் குறித்து பதியக்கூடிய வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, எப்.எம். அலாரம், பதிந்தே கிடைக்கும் கேம்ஸ், 1000 எஸ்.எம்.எஸ். மற்றும் 2000 முகவரிகளைக் கொள்ளும் இடம், 9.9 எம்.பி. நினைவகம், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை இந்த போனின் மற்ற அம்சங்களாகும்.

இந்த போனின் விலை ரூ.3,949 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் மொபைல் போன்களை வடிவமைப்பதில் முன்னோடியாகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள பிளை மொபைல், பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெரிடியன் மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனமாகும். இந்தியா உட்பட 25 ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது இயங்கி வருகிறது.

Monday, October 4, 2010

பட அதிபர்களால் ஒதுக்கப்படும் நடிகர்!

ஒரு படம் சுமாராக ஓடியதற்கே, புகழின் உச்சிக்கே சென்றது மாதிரியான ஓவர் பில்ட்அப் கொடுத்த அந்த நடிகரை பட அதிபர்கள் பலரும் ஒதுக்கி வருகிறார்கள்.

காதலில் விழுந்த அந்த நடிகர் பிரபல நடிகையின் தம்பி என்பது ஊருக்கே தெரிந்த சங்கதி. அக்காவின் அட்வைஸ்படி குண்டான உடம்பை சிலிம் ஆக்கி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படம் சுமாராக ஓடியது.

தமிழ்ப்படத்தில் வரும் ஹீரோ மாதிரி ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக நினைத்த நாயகன், சம்பளமாக கோடிக்கணக்கில்‌ கேட்க ஆரம்பித்தார். அவரது 2வது படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இப்போது வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.

அவரா.. ஓவரா சம்பளம் கேட்பாரே, என்று கூறி பட அதிபர்கள் பலரும் புறக்கணித்து ஒதுக்கி வருகிறார்களாம். தவழும்போதே பறக்க ஆசைப்படலாமா?

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...