Thursday, November 12, 2009

யு.எஸ்.பி. டிரைவை பெர்சனல் கம்ப்யூட்டராக மாற்ற

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம்.

இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.

அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.

மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது.

இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.

இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.

இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும்.

இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தரவிறக்கம் செய்ய :
இங்கே கிளிக் செய்யவும்

MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது. இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன.

ஏற்கனவே தெரிந்த பல புரோகிராம்களை விட்டுவிட்டு தெரியாத ஆனால் பல பயன்பாடுகளைத் தருகின்ற புரோகிராம்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள் ளன. தேவைப்பட்டால் மட்டுமே இறக்கி இன்ஸ் டால் செய்து பயன்படுத்தவும்.

தரவிறக்கம் செய்ய :
இங்கே கிளிக் செய்யவும்

Tuesday, November 10, 2009

சாம்சங் தரும் விண்டோஸ் 7 நோட்புக்

என் 140 என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆறு செல்கள் அடங்கிய இதன் பேட்டரி 11 மணி நேரம் தொடர்ந்து பவர் அளிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.

இதன் திரை 10.1 அங்குல அகலத்தில் பள பளப்பில்லாமல் எல்.இ.டி. டிஸ்பிளேயுடன் இருக்கிறது. 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன.

யு.எஸ்.பி.2, புளுடூத் 2.1, 3 இன் 1 மெமரி கார்ட் ரீடர், நெட்புக் கம்ப்யூட்டரை ஆப் ஷட் டவுண் செய்த பின்னரும் மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களை சார்ஜ் செய்யக்கூடிய யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இதில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் 250 ஜிபி திறன் கொண்டது. இந்த நெட்புக் கம்ப்யூட்டருக்கு சர்வீஸ் தேவைப்பட்டால் சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர் இடத்திற்கே வந்து எடுத்துச் செல்லும் சேவையை மெட்ரோ நகரங்களில் வழங்கி வருகிறது.

ஓராண்டு வாரண்டியுடன் வரும் இந்த நெட்புக் கம்ப்யூட்டர் விலை ரூ. 24,990

Monday, November 9, 2009

கம்ப்யூட்டருக்கு பெயர் சூட்ட

உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும்.

இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?

மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு ஐகான் இருக்கிறதல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் பல டேப்கள் கொண்ட விண்டோ ஒன்று கிடைக்கும்.


இதில்Computer Name என்ற டேபின் மீது கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைக் கவனியுங்கள். இந்த திரையில் Computer Description என்று ஒரு இடம் தெரியும். இதன் நேர் எதிரில் உள்ள கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஒரு சிறு விளக்கம் இருக்கும். இல்லை என்றால் நீங்கள் அமைக்கலாம்.


இதில் மை ஆபீஸ் கம்ப்யூட்டர் அல்லது மை கிச்சன் கம்ப்யூட்டர் என்று உங்களுக்குப் பிடித்த கம்ப்யூட்டர் குறித்த விளக்கத்தினைத் தரலாம். ஆனால் இது கம்ப்யூட்டரின் பெயர் ஆகாது. இதன் கீழாகக் Full Computer Name என்று இருக்கும்.


இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றால் அருகில் உள்ள Change என்பதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள கட்டத்தில் பெயரை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட கம்ப்யூட்டரின் பெயர் நீங்கள் டைப் செய்ததற்கேற்றபடி மாற்றப்பட்டு காட்டப்படும்

Sunday, November 8, 2009

சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக்

மிகச் சிறந்த பேட்டரியுடனும் நல்ல கட்டமைப்புடனும் சாம்சங் நிறுவனம் அண்மையில் NPNC10 என்ற புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

நெட்புக் தயாரித்து வழங்கும் பிரிவில் லேட்டாக நுழைந்தாலும் சிறப்பாக இயங்கும் நெட்புக்குகளை சாம்சங் வழங்கி வருகிறது.

அனைத்து நெட்புக்குகளிலும் இன்டெல் நிறுவனத்தின் ஆட்டம் (Atom) ப்ராசசர் இருந்தாலும் மற்ற செயல்திறன்களிலும் கட்டமைப்பிலும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.

இந்த பிராசசருடன் Intel 945GSE சிப்செட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 1.60 எஏத் ஆக உள்ளது. 1 ஜிபி ராம், 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆன் போர்ட் இன்டெல் ஜி.எம்.ஏ. 950 ஜி.பி.யு. இணைக்கப்பட்டுள்ளது.

இதன் 10.2 அங்குல திரையுடன் 1.3 மெகா பிக்ஸெல் கொண்ட வெப்கேம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ கால்களையும் மெசேஜ்களையும் எளிதாக அனுப்பலாம்.


திரை ரெசல்யூசன் 1024 x 600. வழக்கமான அலுவலகப் பணிகள், அவ்வப்போது சிறிய அளவில் சினிமா மற்றும் கேம்ஸ் விளையாட்டு ஆகியவற்றிற்கு இந்த திரை சரியாக உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 10/100 Ethernet, WiFi b/g and Bluetooth ஆகியவை தரப்பட்டுள்ளன. WiFi b/g க்குப் பதிலாக WiFi/nஐ சாம்சங் வழங்கி இருந்திருக்கலாம்.


ஹார்ட் டிஸ்க் பெரிய கொள்ளளவில் இருப்பதால் இன்னும் வேகமான டவுண்லோடை இதன் மூலம் பெற்றிருக்கலாம்.


மேலும் ஒரு விஜிஏ மற்றும் 3 யு.எஸ்.பி. போர்ட்கள் தரப்பட்டுள்ளன. மேக் அபி வைரஸ் ஸ்கேன் தரப்படுகிறது. எக்ஸ்பிக்கான சாம்சங் ரெகவரி சொல்யூசன் கூடுதல் வசதியாகத் தரப்பட்டிருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது.

இதன் கட்டமைப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். அனைத்தும் சாலிட் கலரில் உள்ளன. கீகள் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் டச் பேட் மற்ற நெட்புக்குகளில் உள்ளதைக் காட்டிலும் சற்று சிறியது என்றாலும் வசதியாக உள்ளது. ஸ்குரோல் செய்திட தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 28,477 எனத் தரப்பட்டுள்ளது.

Saturday, November 7, 2009

அழித்த பைல்களைத் திரும்பப் பெற

நம் வாசகர்களிடமிருந்து அழித்த பைல்களை மீண்டும் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி அவசரம் என்று குறியிட்டு வாரந்தோறும் குறைந்தது 20 கடிதங்களாவது வருகின்றன.

சென்ற வாரம் இந்த எண்ணத்துடன் இணையத்தில் உலா வந்த போது என்ற ஒரு புரோகிராம் இதற்காகவே எழுதப்பட்டு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக ஒரு குறிப்பினைப் படித்தேன். தொடர்ந்து அதனைத் தேடிhttp://www.recuva.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.

இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.


எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை

பிரவுசரை அடிக்கடி மாற்ற

இலவசமாக பல பிரவுசர்கள் கிடைப்பதால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்கத் தொடங்கிவிட்டனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், சபாரி ஆகிய பிரவுசர்கள் பரவலாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டன. இருந்தாலும் ஒன்று பிடிக்காமால் போகையில் இன்னொன்றுக்கு உடனே மாற இயலாது.

டெஸ்க் டாப் அல்லது குயிக் லாஞ்ச் சென்று கிளிக் செய்து இயக்கி பின் இன்டர்நெட் சைட் காண்பதைத் தொடங்க வேண்டும். பெரும்பாலும் நாம் ஒரு பிரவுசருக்கு அடிமையாகி விட்டோம் என்றால் அதனையேதான் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.

இதற்குக் காரணம் பழகிப் போன சூழ்நிலைதான். ஆனால் வெப் சைட்டுகளை உருவாக்கும் புரோகிராமர்கள் அனைத்து பிரவுசர்களையும் தங்கள் சிஸ்டங்களில் வைத்து அடுத்தடுத்து இயக்குவார்கள்.


ஏனென்றால் இவர்கள் உருவாக்கும் தளங்கள் அனைத்து பிரவுசர்களிலும் இயங்குவதனை உறுதி செய்திட வேண்டிய கட்டாயம். இந்த பிரவுசர் மாற்றத்தை எளிதாக்கிட சில புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

அண்மையில் இணையத்தில் அவ்வாறு கிடைத்த புரோகிராம் Browser Tray Switch. இந்த புரோகிராம் உங்களுடைய சிஸ்டத்தில் 90 கேபி இடமே எடுத்துக் கொள்ளும்.

ஒரு பிரவுசரிலிருந்து இன்னொரு பிரவுசருக்கு மாறுவதை மிக எளிதாகத் தருவதில் தான் இதன் சிறப்பு உள்ளது. இதனைப் பெறhttp://www.donationcoder.com/Software/Mouser/browsertray/index.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


இதனை டவுண்லோட் செய்வதற்கும் அதன் பின் இன்ஸ்டால் செய்வதற்கும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகிறது. இன்ஸ்டலேஷன் ஆன பின் ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் பிரவுசரை மாற்ற வேண்டும் என்றால் ரைட் கிளிக் செய்திட வேண்டியதுதான்.


உடனே தேர்ந்தெடுக்கப்பட்ட பைல்களும் தள முகவரிகளும் நீங்கள் தேர்ந் தெடுத்த பிரவுசரில் திறக்கப்படும். பிரவுசர் மாற்றத் திற்கு உதவுவது மட்டுமின்றி இது உங்கள் சிஸ்டத்தைப் பாதுகாப் பாக வைத்திருக்கவும் உதவுகிறது

Friday, November 6, 2009

பிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில்

இன்டர்நெட் தளங்கள் நமக்குப் பல்வேறு ஆன்லைன் சாதனங்களைத் தருகின்றன. இவற்றை ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றோம்.

இவற்றை இன்டர்நெட் இணைப்பில் அந்த தளங்களில் இருந்தவாறுதான் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக கூகுள் மெயில் நமக்கு இன்டர்நெட்டில் கிடைக்கும் ஆன்லைன் அப்ளிகேஷன்களில் பிரபலமானதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படுவதும் ஆகும்.

இதனை ஒரு பிரவுசரைத் திறந்து அதன் மூலம் தான் பயன்படுத்த முடியும். இதற்குப் பதிலாக கூகுள் மெயில் மற்றும் இது போன்ற ஆன்லைன் அப்ளிகேஷன்களை இன்டர்நெட் இணைப்பில் பிரவுசர் இல்லாமல் தனியே ஒரு புரோகிராம் போன்று பயன்படுத்தும் வசதி கிடைத்துள்ளது.

இவ்வாறு இதனை மாற்றித் தரும் புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதனை எப்படி இயக்கி இது போல டூல்களை அமைக்கலாம் என்று பார்ப்போம்.


1. இந்த புரோகிராம் பெயர் Mozilla Prism.. இதனைhttp://wiki.mozilla.org/WebRunner என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். இது இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகவரியினை அட்ரஸ் பாரில் டைப் செய்து இதன் தளத்தைப் பெறுங்கள். அடுத்து அந்த தளத்தில் சிறிது ஸ்குரோல் செய்து அங்குள்ள கன்டென்ட் பாக்ஸில்Installer லிங்க் என ஒன்று இருக்கும். இங்கு Latest Version பிரிவு கிடைக்கும்.

இதில் பல்வேறு பதிப்புகள் தரப்பட்டிருக்கும். பல வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான மொஸில்லா பிரிஸம் புரோகிராமின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும்Zip பதிப்பு மற்றும் நேரடியாக இயக்கக் கூடிய exe பைல்கள் கிடைக்கும்.exe பைலையே இறக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் ஸிப் பைலை விரித்து பின் இயக்கும் காலம் நமக்கு மிச்சமாகும். இந்த ஞுதுஞு. இன்ஸ்டலேஷன் பைலை உங்கள் டெஸ்க் டாப்பில் இறக் கிக் கொள்ளுங்கள்.



2. பின் உங்கள் டெஸ்க் டாப் சென்று இந்த பைலில் கிளிக் செய்து மொஸில்லா பிரிஸம் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்த பின் Start கிளிக் செய்து All Programs சென்றால் அங்கு இந்த புரோகிராம் பட்டியலில் இறுதியாக இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பிரவுசர் இல்லாமல் இந்த புரோகிராம் இயக்கப்படும்.

இந்த வேளையில் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். மொஸில்லா பிரிஸம் புரோகிராமில் மேலாக ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் வழங்கப்படும். இதில் நீங்கள் எந்த ஆன் லைன் டூலை (எ.கா. கூகுள் மெயில்) கம்ப்யூட்டர் புரோகிராமாக மாற்ற வேண்டுமோ அதன் தள முகவரியை (எ.கா.www.googlemail.com) டைப் செய்திடவும்.

பின் இங்குள்ள Name பாக்ஸில் இதனைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெயர் (Google Mail) வழங்கவும். இதன் கீழாகப் பல வசதிகள் தேர்ந்தெடுக்க வழங்கப்பட்டிருக்கும். இவை எல்லாம் ஒரு பிரவுசர் வழியாகச் சென்றால் என்ன என்ன வசதிகள் இருக்குமோ அவை பட்டியலிடப்பட்டிருக்கும். உங்களுக்கு என்ன என்ன தேவையோ அவற்றிற்கான பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.



3. பின் இதன் கீழாக இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீகள் எங்கெல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்து ஆப்ஷன் தரலாம். டெஸ்க்டாப், குயிக் லாஞ்ச் பார் போன்ற இடங்களை முடிவு செய்திடலாம். இந்த புரோகிராமிற்கான ஐகானையும் நீங்கள் செலக்ட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிறிய போட்டோக்களைக் கூட இதற்கு ஐகானாக வைக்கலாம்.



4. இனி இந்த புரோகிராமினை இயக்கிப் பார்க்கலாம். பிரவுசரிலிருந்து விலகி நீங்கள் ஏற்கனவே அமைத்த ஷார்ட் கட் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். வழக்கமான பிரவுசர் விண்டோவில் உங்கள் ஆன்லைன் அப்ளிகேஷன் திறக்காமல் தனி புரோகிராம் போல திறக்கப்படும்.

இதில் வழக்கமாக பிரவுசர் விண்டோவில் நம் கவனத்தைத் தேவையில்லாமல் இழுக்கும் தேவையற்ற பட்டன்கள் இருக்காது. இதனை வேர்ட், எக்ஸெல் போல ஒரு புரோகிராமாக இயக்கலாம். இதற்கான டேப் டாஸ்க் பாரில் இருக்கும்.



5. மொஸில்லா பிரிஸம் ஆன்லைன் டூலை தனி புரோகிராமாக உங்களுக்கு மாற்றிக் கொடுத்தாலும் வழக்கம் போல பிரவுசர் மூலமாகவும் நீங்கள் ஆன் லைன் டூலை இயக்கலாம். மொஸில் லா பிரவுசர் மூலம் உருவாக்கிய டூலை நீங்கள் தேவையில்லை என்றால் அன் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.


பிரிஸம் பயர் பாக்ஸ் அடிப்படையில் உருவானதால் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு பயன்பாட்டினையும் இதில் இயக்கலாம். பிரிஸம் மூலம் உருவாக்கப்படும் ஆன் லைன் டூல்கள் எல்லாம்Web Apps என்ற போல்டரில் ஸ்டார்ட் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் பிரிவில் தரப்பட்டிருக்கும்.

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...