உலகம் சுற்றும் இந்திய மொபைல்கள்

மொபைல் போன்கள் பயன்படுத்துவதில் அதிகமாகவும், வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் இந்தியா, சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்தியாவில் தயாராகும் மொபைல்கள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையாவது உங்களுக்குத் தெரியுமா? இங்கு தயாரிக்கப்படும் போன்களில் 50% க்கு மேல் வெளிநாடுகளில் விற்பனையாகின்றன.

ஆண்டுக்கு 60 நாடுகளுக்கு மேலாக 6 கோடி போன்கள் அனுப்பப்பட்டு விற்பனையாகின்றன. உலக அளவில்தயாராகும் 110 கோடி போன்களில், பத்தில் ஒன்று இந்தியாவில் நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை, சாம்சங்கின் நயோடா தொழிற்சாலை அல்லது எல்.ஜி.யின் புனே மையத்தில் தயாரானதாக இருக்கிறது.

தற்போது இந்தியாவில் தயாராகும் 12 கோடி போன்களின் எண்ணிக்கையை, 2010 ஆம் ஆண்டில் 25 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக இந்திய செல்லுலர் அசோசியேஷன் தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails